Anandha Barathi
மலஜல உபாதிகளை குறித்து வள்ளலார் அருளியுள்ள சில குறிப்புக்கள் - விளக்கம் - "சன்மார்க்க சாதகர்" சிவராமசேது அய்யா, திருமுதுகுன்றம்

நோய் ஏற்படுவதற்க்கு மல ஜலங்கள் உடம்பில் தங்கியுள்ளதே மிக முக்கிய காரணம்,

எந்த விதக்காரணம் கொண்டும் மல ஜாலங்களை தடைசெய்தல் ஆகாது என்பது பெருமானின் மிக முக்கியமான விதி,

மல ஜாலம் தடைபட்டால் என்ன செய்ய வேண்டும்?

எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை பெருமானார் மிக மிக தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

அதன் விவரத்தைக் கீழே காணலாம்:

======*************========


மலஜல உபாதிகளை குறித்து இந்திரிய ஒழுக்கம்  பகுதியில் பெருமானார் அருளியுள்ள சில குறிப்புக்கள்:

மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றி கிரமத்தில் நிற்க்க செய்வித்தல்

எவ்விதமெனில்,

1) மித ஆகாரத்தாலும், மித போகத்தாலும் செய்வித்தல்,

2) கால பேதத்தாலும் (கால மாறுபடுதல்),
    உஷ்ண ஆபாசத்தாலும் (உடல் வெப்ப நிலை மாறுபாட்டாலும்) தடை நேர்ந்தால்,


         1.ஒளஷாதி வகைகளாலும் (மருந்து வகைகளாலும்)

         2.பெளதிக மூலங்களாலும் (மூலிகை வேர் வகைகளாலும்)

         3.சரபேத அஷ்த பரிச தத்திரத்தாலும்,(சரபேத‍‍=மூச்சினை மாற்றி மாற்றி விடுதல்)

         4.மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்                                                  (மூலாதாரத்தில் மனத்தினை நிற்கச் செய்தல்)

======*************=========

மலஜல உபாதிகளை குறித்து நித்ய கரும விதியில் பெருமானார் அருளியுள்ள சில குறிப்புக்கள்:

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,

விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து,

கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.

பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும்.

மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும்.

மலங்கழிக்கின்றபோது:

1) வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

ஜலம் கழிக்கும் போது:

2) இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

3) மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல்,
மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்

(மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்(மூலாதாரத்தில் மனத்தினை நிற்கச் செய்தல்.)).


======================================================

கேள்வி: 

சரபேத அஷ்த பரிச தத்திரம் என்றால் என்ன? அதை எப்படி செய்வது?

பதில்:

"சரபேத அஷ்த பரிச தத்திரம்" குறித்து வள்ளலார் நித்ய கரும விதியில் அருளியுள்ளார் ,

அது யாதெனில்:

சரபேத அஷ்த பரிச தத்திரம் (சரபேத‍‍=மூச்சினை மாற்றி மாற்றி விடுதல்): 

மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். 


ஜலம் தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்.

Vallalarin_Vilakkam.jpg

Vallalarin_Vilakkam.jpg

Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Nithiya ozukkam seyalakkuvom
Monday, February 26, 2018 at 06:40 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R