Badhey Venkatesh
சமயமும் – சுத்த சன்மார்க்கமும்
சமயமும் – சுத்த சன்மார்க்கமும்
BG Venkatesh / December 1, 2020
சமயமும் – சுத்த சன்மார்க்கமும்

சமயத்தின் திருவண்ணாமலையும்

சன்மார்க்கத்தின் சத்திய ஞான சபையும் ஒன்றே ஆம்

எப்படியா ??

1 அண்ணாமலையில் சுற்று வட்டப்பாதை உளது

கிரிவலம் செய்ய

சத்திய ஞான சபையிலும் அது உளது

அது நம் சிரசின் உள் அமைப்பு ஆம்

அண்ணாமலையில் மலை மீது ஜோதி

ஞான சபையிலும் நடுவே ஜோதி

ரெண்டும் துரிய மலை குறிப்பதாகும்

ரெண்டும் நம் சிரசின் உள் அமைப்பு தான்

ரெண்டும் உச்சி விளங்கும் ஆன்ம ஜோதி குறிப்பதாகும்

பின் எப்படி சமயம் பொய் ஆனது ??

2 சிதம்பரமும் – சித்தி வளாகமும் ஒன்றே ஆம்

என்ன கோபமாகவும் வியப்பாகவும் இருக்கா ??

சமயம் : சிதம்பரம் – இறைவன் வெளி ஆனவன் என்கிறது

பொன்னம்பலம் சிற்றம்பலம் என பேர் சூட்டுது

இங்கு தான் மாணிக்க வாசகர் வெளியில் கலந்தார்

சு சன்மார்க்கம் :

சித்திவளாகம் – திருக்காப்பிட்டு கொண்டஅறையும்

வெட்ட வெளி ஆகத்தான் இருக்கு

உள்ளே ஒன்றுமிலை

இங்கு தான் வள்ளல் பெருமான் உடல்

அருள் ஒளியால் வேதிக்கப்பட்டு

அருள் – ஞான உடலாக மாறியது

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் ??

சன்மார்க்க அன்பர் – சங்கங்கள் தெரிவிக்கலாம்

சைவம் சிற்றம்பலம் வரை அனுபவம் உரைத்துவிட்டது

சுத்த சிவ சன்மார்க்கம் அது வரை உரை செய்தும்

பின் அதுக்கு மேல் ஒரு படி வைத்து

ஞான சுகாதீத வெளி – சுத்த சிவ துரியாதீதம் எனும் அனுபவம் வைத்து

அது எல்லா சமய கலை அந்தங்கள் தனக்குள் அடக்கி வைத்திருக்கு என முடித்து வைத்துவிட்டார்

அதனால் தான் உத்தர ஞான சிதம்பரம் எனவும்

ஞான சித்திபுரம் எனவும் பேரிட்டார் வள்ளல்

சிதம்பரத்துக்கு ஒரு படி மேல் தான் உத்தர ஞான சிதம்பரம்

அப்போ சிதம்பரம் வரை அனுபவம் உண்மை தானே அல்லாது பொய் அல்லவே ??

ஆய்வும் அனுபவம் தான் பேசும் – வெறும் சடங்கு சரியாதிகள் அல்ல

வள்ளல் பெருமான் :

“ என் உயிர் நாயகர் நடராஜர் “ என பகரும் போது

நடராஜர் எந்த சமய தெய்வம் ??

பதில் கூறவும் சன்மார்க்க அன்பர் / சங்கம்

வெங்கடேஷ்

IMG-20201228-WA0000.jpg

IMG-20201228-WA0000.jpg