Badhey Venkatesh
” திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – சன்மார்க்க விளக்கம் 3 ”
” திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – சன்மார்க்க விளக்கம் 3 ”


கார்த்திகை நட்சத்திரத்தின் போது இங்கு மலையில் உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது
இதன் தாத்பரியம் யாதெனில் ??
அண்ணாமலை = பிரணவ மலை – சுழுமுனை உச்சி
நம் சிரசிலும் அகத்தில் உள்ளது
சுழுமுனை நாடியின் உச்சியில் ஆன்மா ஜோதி பிரகாசிப்பதையே ( கோடி சூரியப்பிரகாஸ்ம் உடையது ஆன்ம ஜோதி ) , புறத்திலே மலையின் உச்சியில் ” மகா தீபம் ” ஏற்றிக்காண்பித்திருக்கிறார் நம் முன்னோர்
இதை நிரூபிக்கும் வகையில் கோவில்களில் – ” துவஜஸ்தம்பத்தின் உச்சியில் மகா தீபம் ” ஏற்றுவர் –

துவஜஸ்தம்பம் = சுழுமுனை நாடி

உச்சி = 36 தத்துவங்கள் கடையாம் நாதத்தின் மேல் – ஆன்மா உள்ளது , அதனால் தீபம் அங்கு ஏற்றப்படுடிகிறது
இந்த தத்துவ வெளிப்பாடெல்லாம் சொல்லியாயிற்று – ஆனால் யார்க்கு உண்மை தெரிந்து வைத்து உள்ளனர் என்பது தான் கேள்வி ??

எல்லாரும் புற சடங்கையே செய்கிறார் – அகத்தை கோட்டை விட்டார் பெரும்பாலோர்
மலையில் ஏற்றப்படும் தீபமானது பெருங்காற்றாலும் மழையாலும் அணையாதவாறு எரியும் வகையில் ஏற்பாடு செயப்பட்டுளது
எண்ணெய் கொப்பரை – திரி – நெய் எல்லாம் சேர்ந்து அணையாத மாதிரி காக்கும்
இதற்காக 1,100 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது . ஐந்து அடி 9 அங்குலம் உயரமும், 300 கிலோ எடையில், செப்பு உள்ளிட்ட உலோகத்தில் கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுது
இது கோவிலில் விளங்கும் நந்தா தீபம் மாதிரி புறத்தே மலை உச்சியிலே ஏற்றுவது
இதுக்கு பிரமாணம் 

வள்ளல் பெருமான் 6ம் திருமுறை – அருள் விளக்க மாலை

அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. 24

எப்படி நம் முன்னோர் ஞானம் அறிவு ??
பின் எப்படி சமய மதம் பொய்யாகும் ??
இது ஞானியர் ஒற்றுமை ??

வெங்கடேஷ்  

உடன் நம் அன்பர் - மத சமயம்   பொய் என ஆதியில்  உரைத்திட்ட அபெஜோதி என பதில் அளிப்பார் நமக்கு தெரியாதது மாதிரி  

IMG-20201130-WA0001.jpg

IMG-20201130-WA0001.jpg