ஞானத் திண்ணை
வள்ளலாரைப் படிப்போம்...! சிந்திப்போம்...! வாழ்வியலாக்குவோம்...!
வள்ளலார் ஞான நெறி"
மாத மின்னிதழின்....
 முதல் இதழானது....

 வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற...
 அக்டோபர் 5 யில் ...
 வெளிவரயிருக்கின்றது..

( இவ் இதழுக்கான... செயல்திட்ட சிந்தனைகளில் சில...)

இவ் இதழ் முழுக்க முழுக்க வள்ளல் பெருமானின் ஞானக் கருத்துகளை மையக்கருவாகக் கொண்டு வெளிவர இருக்கின்றது.

காகித வடிவிலான மாத இதழாக இல்லாமல்... PDF வடிவில் இணையத்தில் கிடைக்கும் வகையில் வெளிவரயிருக்கின்றது.

இவ் இதழின் உள்ளடக்கம் பற்றிய சில சிந்தனைகள்...

★ தலையங்கம்

★ வள்ளலார் - சன்மார்க்க கொள்கை விளக்க கட்டுரை...

★ வள்ளலார் வாழ்வில் நடைபெற்ற வரலாற்று
நிகழ்வுகள் - மற்றும் அற்புதங்கள்...

★ திருஅருட்பா - ஒரு சோறு ஒரு பதம்... (திருஅருட்பாவில் ஏதேனும் ஒரு பாடலை மட்டும் எடுத்துக்கொண்டு ... அதை விளக்கி கட்டுரை எழுதுதல்)

★ திருஅருட்பா - பதிக விளக்கவுரை... (திருஅருட்பாவில் ஏதேனும் ஒரு பதிகத்திற்கு விளக்க உரை எழுதுதல்...
உதாரணமாக... அகவல் , நெஞ்சறிவுறுத்தல் , அனுபவ மாலை ... போன்ற பெரும் பதிகங்களுக்கு..... இதழ்தோறும் தொடர்ந்து விளக்கவுரை எழுதி வருதல்...)

★ வள்ளலார் பற்றிய தரமான நூல்களின் அறிமுக - மதிப்புரை (வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் கொள்கைகளை விளக்கி வெளிவந்துள்ள தரமான நூல்களைப் பற்றிய அறிமுகப் பதிவு...)

★ வள்ளலாரியம் தொடர்பாகப் படைப்பிலக்கியம் (வள்ளலார் கோள்கையை விளக்கும் வகையிலான கவிதைகள் சிறுகதைகள்)

★ வள்ளலார் கூறும் ஞான மூலிகைகள்
(சித்த மருத்துவச் செய்திகள்... உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய பதிவுகள் )

★ வள்ளலாரின் சுத்த சன்மார்க்க வழியில் ... தற்காலத்தில் வாழ்ந்து வருபவர்களின் அனுபவங்கள் - பேட்டிகள்..

★ சன்மார்க்க சங்க நிகழ்வு - அறிவிப்புகள்...
( ஆங்காங்கு நிகழயிருக்கும் வள்ளலார் விழாக்கள் பற்றிய அறிவிப்புகள்)

★ சன்மார்க்க சங்க நிகழ்வு - செய்திகள்..
(ஆங்காங்கு நிகழ்ந்த வள்ளலார் விழாக்கள் பற்றிய செய்திச் சுருக்கம்..)

★ வாசகர் கடிதப் பகுதி...

- என இதழின் உள்ளடகத்தை அமைக்கலாம் என எண்ணியுள்ளோம்..

இத்தகைய பொருண்மைகளுடன் பதிவுகள் , கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரை ஆக்கங்களை 6379827595 எனும் வாட்ஸாப் எண்ணிற்கோ.. அல்லது vallalargnananerai@gmail.com எனும் இ மெயில் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

வள்ளலார் ஞான நெறி - மாத மின்னிதழின் ... முதல் இதழை ... வள்ளல் பெருமனார் வருவிக்கவுற்ற அக்டோபர் ஐந்தில் வெளிவர இருப்பதால்....

சன்மார்க்க சான்றோர் பெருமக்களின் கட்டுரை ஆக்கங்கள்.... செப்டம்பர் 25-க்குள் ஆசிரியர் குழுவிற்குக் கிடைக்குமாறு வேண்டப்படுகின்றது.

#எல்லாம்_செயல்_கூடும்....