Universal Government of Suddha Sanmaarkkaa
உயிர்ப்பலியை தடுத்து நிறுத்த பரப்புரை -மேல்மலையனூர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் ஆலய தேர்த்திருவிழா நேற்று (11/03/2019) நடந்தது.


தெய்வத்தின் பெயரால் நடைபெறும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்த தயவுத்திரு ஐயா சீனி.சட்டையப்பனாரால் தொடங்கப்பட்ட பரப்புரை இயக்கத்தின் தொடர்ச்சியாக நேற்றும் அதன் நோக்கம் மேல்மலையனூர் மண்ணில் நிலைநாட்டப்பட்டது.



கருங்குழியைச் சேர்ந்த சுத்த மருத்துவர் தயவுத்திரு சாது சிவக்குமார் ஐயா தலைமையில் சாதுக்களான தயவுத்திரு சாது முரளி ஐயா, தயவுத்திரு சாது சடச்சாமி ஐயா, தயவுத்திரு சாது அரிகிருஷ்ணன் ஐயா, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாதுக்கள் உயிர்பலி எதிர்ப்பு பரப்புரைக்காக தங்களை முழுமையாக ஒப்படைத்து அவர்கள் ஆற்றிய தொண்டு மகத்தானது.


சன்மார்க்க அறிஞர் முனைவர் இராம.பாண்டுரங்கன் ஐயா, தயவுத்திரு இராதாகிருஷ்ணன் ஐயா ஆகியோர் பரப்புரையை சிறப்பாக நெறிப்படுத்தினார்கள். நல்லசேவிபுரம் தயவுத்திரு சுப்பிரமணிய அடிகளார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.


செஞ்சி வட்ட சன்மார்க்க சங்கத்தாரும் மேல்மலையனூர் வட்ட சன்மார்க்க சங்கத்தாரும் இணைந்து பரப்புரைப் பணியுடன் பசியாற்றுவித்தலையும் சிறப்பாக செய்தனர். குறிப்பாக தயவுத்திரு ஆலம்பூண்டி அ.இரவிச்சந்திரன், தயவுத்திரு தண்டபாணி, தயவுத்திரு தவமணி ஆகியோரின் குடும்பத்தினர் கூழ், மோர், நீர் என பக்தர்களுக்கு இடைவிடாமல் வழங்கிக்கொண்டே இருந்தார்கள். முட்டத்தூர் தயவுத்திரு வெங்கடேசன் ஐயா சன்மார்க்க நீதிக்கொடியை திசையெங்கும் தெரியும்படி சன்மார்க்கத்தை பரப்பினார்.


தயவுத்திரு நடுப்பட்டு ப.புருசோத்தமன் ஐயா தலைமையில் அவரது குடும்பத்தினர் நாள் முழுக்க வில்லுப்பாட்டின் மூலம் சன்மார்க்க இசையை முழங்கினார்கள்.


 த.மங்கையர்க்கரசி கொல்லாமை குறித்த சொற்பொழிவு நிகழ்த்தினார். மதத்தின் பெயராலும் பண்டிகையின் பெயராலும் ஆடு,ஒட்டகம் உள்ளிட்ட உயிர்களைக் கொல்லும் இஸ்லாமியர்களிடம் நமது பரப்புரையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.


சன்மார்க்க சாதுக்களின் தந்திரமான, நெகிழ்ச்சியான உயிர்ப்பலி எதிர்ப்பு பரப்புரையைக் கண்ட ஒருசில பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த ஆடு, கோழியை உயிர்பலி கொடுக்காமல் பசியாற்றுவித்தலுக்கு பணமும் தந்தது உயிர்நேயத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
தமிழகம் முழுக்க சன்மார்க்க சாதுக்கள் இதுபோன்ற பணிகளை வருங்காலங்களில் முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்.



வள்ளுவரும் வள்ளலாரும் உயர்த்திப்பிடித்த உயிர்நேயம் தமிழ் மண்ணில் தழைக்க நாம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. பயணிப்போம்

 

 

6df1dcbf-d845-49ca-8568-dff91aabb7c9.jpg

6df1dcbf-d845-49ca-8568-dff91aabb7c9.jpg

8beb1c37-66d7-49e9-892c-04e1c33defdc.jpg

8beb1c37-66d7-49e9-892c-04e1c33defdc.jpg

9756d3f5-6300-4743-b229-888a06fc45bb.jpg

9756d3f5-6300-4743-b229-888a06fc45bb.jpg

18113bc9-ca9c-4c34-8654-42f41c6759cd.jpg

18113bc9-ca9c-4c34-8654-42f41c6759cd.jpg

561575ad-7a4d-406b-9521-f29ef15bafd0.jpg

561575ad-7a4d-406b-9521-f29ef15bafd0.jpg

c6ad4fd4-0d99-4d96-b892-48d4a27ac5e7.jpg

c6ad4fd4-0d99-4d96-b892-48d4a27ac5e7.jpg

d6a28d6d-4158-43e9-a80c-daf2c8d82537.jpg

d6a28d6d-4158-43e9-a80c-daf2c8d82537.jpg

d74b5ddf-bff3-4fe6-a40e-d4c22a9ec467.jpg

d74b5ddf-bff3-4fe6-a40e-d4c22a9ec467.jpg

efb0ff54-7126-40b2-9553-2a4aa08841dc.jpg

efb0ff54-7126-40b2-9553-2a4aa08841dc.jpg

venkatachalapathi baskar
இது போன்ற களப்பணிகளை நாம் செய்ய வேண்டும்.

இந்த புனிதப் பணியை மேற்கொண்ட அனைத்து சன்மார்க்க நண்பர்களுக்கும் நன்றி.
Sunday, March 17, 2019 at 12:01 pm by venkatachalapathi baskar