அருள்பாவலர் சக்திவேல் .வே
தர்மச்சாலையின் தவப் பயன்....
வடலூர் தர்மச்சாலை 151-ஆம் ஆண்டு விழா .....சிறப்புப் பதிவு (2)

★1867 வைகாசி 11-இல் வடலூரில் வள்ளல் பெருமனார் சத்தியத் தர்மச்சாலையை தொடங்கினார்கள்.

●இதன் நோக்கம் எவ்வகையிலும் ஆதரவில்லாத - ஆகாரமில்லாத ஏழைகளின் பசியைத் தினசரி ஆற்றிவைப்பதாகும்.

◆அன்று தொடங்கிய தர்மச்சாலை இன்று வரை 150 ஆண்டுகளாய் இடைவிடாது - தடைபடாது ஏழைகளின் பசியைத் தவிர்க்கும் பணியைச் செய்து வருகின்றது....என்பது அனைவரும் அறிந்ததே.....

★■◆●>> சத்தியத் தர்மச்சாலை வள்ளல் பெருமனாரைப் பொறுத்தவரை தவச்சாலையாகவும் திகழ்ந்தது...... என்பது உங்களுக்குத் தெரியுமா....?..!

★பொதுவாக துறவிகள் - முனிவர்கள் - சித்தர்கள் தவம் செய்வதற்காக ; மக்கள் நடமாட்டமில்லாத மலை குகைக்கோ - காடுகளுக்கோ செல்வார்கள்...

★■◆●ஆனால்>>> மிகப்பெரிய ஞானத் துறவியாக வள்ளலார் இருந்த பொழுதிலும்..... தவம் செய்வதற்காக ..... மக்களை விட்டுவிட்டு எங்கும் செல்லவில்லை..

★ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு உணவும் ; ஞானப் பசிக்கு அறிவு கற்பித்தலும் ; நோய்க்கு சித்த மருத்துவமும் வழங்கி மக்கள் தொண்டு செய்தார்கள்...

★■◆●>>இவ்வாறாக... வள்ளலார் தினசரி பகல் நேரம் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் தொண்டாற்றினார்கள்..

★தர்மச்சாலையில் வள்ளலார் இரவு 12 -மணி முதல் 3 -மணி வரை மட்டுமே உறங்கினார்கள். (சித்திவளாகத்தில் வள்ளலார் இருந்த பொழுது இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே உறங்கினார்கள்)

★■◆●இரவில் மீதி இருந்த நேரம் எல்லாம் ... வள்ளல் பெருமனார் தவம் புரிந்தார்கள்..

★வள்ளல் பெருமனார் செய்த தவம் பலித்தது>>>>>> வள்ளலார் சொல்லும் வார்த்தை இதோ....

"காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே!

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே!

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம்

தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே!

சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே....!

★■◆●>>>எனும் திருஅருட்பா (4181) பாடலால் நாம் புரிந்து கொள்வன என்ன.... சற்றே சிந்திப்போமே..!

★வள்ளலாரின் தவத்திற்கு இரங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ; ஒரு நாள் காலைப் பொழுதில் தர்மச்சாலையில் எழுந்தருளி அருள் செய்தார்கள்.....

★பல பிறவிகள் கடுந் தவம் செய்து அடையத்தக்க பெரும் பயனின் விளைவுகளை எல்லாம் இறைவன் வள்ளலாருக்குத் தந்தருளினார்கள்.

★●■>இது போன்ற கருத்தை வள்ளலார் மேலும் சில பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள்..... அவை வருமாறு..

★ " காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்

சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்...." (அருட்பா 3893)

★"...காலையிலே வந்து கருணை அளித்தே

தருமச் சாலையிலே வா என்றான் தான்" (திருஅருட்பா4038)

★■◆●>>மேற்கண்ட திருஅருட்பா வரிகளால் நாம் புரிந்துகொள்வன.....

★தர்மச்சாலை ஏழைகளின் பசியைத் தவிர்க்கும் பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை..

★தர்மச்சாலையில் வள்ளலார் மிகப்பெரிய கடுந்தவம் புரிந்தார்கள் ; பண்ணிய தவம்பலித்தது..

★தர்மச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளலாருக்குக் காட்சியளித்து அருளினார்கள்......

(தர்மச்சாலையின் 151-ஆம் ஆண்டு விழா சிறப்பு பதிவு....ஆக்கம் ... அருள்பாவலர் சக்திவேல் .வே..9865545979...வள்ளலார் ஞான நெறி வாட்ஸாப் குழு வாயிலாக...)