அருள்பாவலர் சக்திவேல் .வே
"சத்திய ஞான சபை எ(ன்)னுள் கண்டனன்....."
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் :
~~~~~~~~~~~~~~~~~~~~
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனார் தான் , தன் அகத்துள் கண்டு அனுபவித்த அருட்பெருஞ்ஜோதியை உலகத்தாரும் அனுபவிக்க வேண்டுமென விரும்பினார்கள்....

★அதற்காகவே சத்திய ஞான சபையை வடலூரில் அமைத்து ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்....

★"பேரொளியான இறைவன் மனித தேகத்தில் காரியப்பட்டுள்ளது "- என்பது பெருமனார் கண்டு - உணர்ந்து - அனுபவித்த உண்மை .

(இது தொடர்பாக வள்ளல் பெருமனார் உபதேசக் குறிப்பில் கூறியுள்ள குறிப்புகளை நோக்குவோம்... )

★1."கடவுளை அறிவதற்கு ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும்".

★2."மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவதே உத்தமம்."

★3."தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5 அதில் முக்கிய ஸ்தானம் 2 அவை கண்டம் , சிரம்".

★4."மனித தேகமே சுவர்க்கம் நரகம் இருக்கின்ற இடம்."

★5."மனித தேகத்தில் கண்டம் முதல் உச்சி வரை ....இந்தப் பதங்களுக்கு சுவர்க்கம் என்று பெயர்".

★6.."சிரத்தில் இருக்கின்ற ஜீவன் இறக்கின்றதில்லை ; கண்டதின் (கீழ்) இருக்கின்ற ஜீவன் இறக்கும்".

★7."(இப்) பிண்டத்தில் பூர்வம் என்பது தலை ".

★8."பூர்வ ஞானம் என்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல் ".

★9."புருவ மத்தி சபை".

★10."அறிவே பதி"

★11."உத்தரம் அகப் புறமாகிய பரிதி(சூரியன்) போன்ற கரணக்காட்சி".

★12."உத்தரோத்திரம் அகமாகிய அக்கினி போன்ற ஆன்மக் காட்சி".

★14."அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை. "

★15."அந்தப் பிரகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள். "

★16."அந்த உள்ளொளியின் அசைவு நடனம்.
இதுதான் ஞான காச நடனம் ".

★17."கடவுள் பூரண இயற்கை விளக்கம் காரியமாகவும் காரணமாகவும் , காரிய - காரணமாகவும் இருக்கின்றது".

★18.(நாம்) " எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்".

★19."நாம் தினம் ஆறு காலத்திலும் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும்".

★20."சுத்த சன்மார்க்கத்திற்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்திற்கு மேல்".

>>>>>>>தமிழினமே.... தமிழ்ச் சித்தர்களின் மரபில் "இறை" என்பது நம்மைவிட்டு வெளியே உள்ளதன்று.... "இறையாற்றல்" என்பது ஒவ்வொரு மனிதனும் தானே உணர்ந்து - கண்டு - அனுபவிக்கும் பேரின்ப நிலையே ஆகும்.

>>>●>>>ஆம்>>>வாழையடி வாழையென வந்த தமிழ்ச் சித்தர்களின் மரபை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாய் எடுத்து விளக்கி - காட்சிப்படுத்தி வழிகாட்டிய மகான் வள்ளல் பெருமனார்.

■திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனார் அருளிய ஞான களஞ்சியமான திருஅருட்பாவையும் உபதேசங்களையும் கசடற கற்போம்.! உண்மையான ஞான மார்க்கத்தைப் புரிந்துகொள்வோம்.! வள்ளல் வகுத்துக் காட்டிய வழியில் வாழ்வோம்!

(கருத்துப் பதிவு : மன்னை அருள்பாவலர்)