T.M.R.
காரணப்பட்டு-சமரஸபஜனை ச.மு.கந்தசாமி ஐயா இயற்றிய "பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழா - 06-01-2015 - வடலூர்
அன்புடையீர் வந்தனம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு-சமரஸபஜனை ச.மு.கந்தசாமி ஐயா இயற்றிய "பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழாவிற்கு தங்களையெல்லாம் அன்புடன் அழைக்கின்றோம்.

வருகின்ற மாதப்பூசம் 06-01-2015 அன்று வடலூரில் ஞானசபைக்கு அருகில் உள்ள "கருணீகர் இல்லத்தில்" நூல் வெளியீட்டு விழா மதியம் 03.00 மணியிலிருந்து 06.00 மணிவரை, திருவருட்பிரகாச வள்ளலார் தலைமையில் நடைபெற உள்ளது.

ச.மு.க., அவர்களின் வழிவந்த திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பில் வெளிவரும் இந்நூலை முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் வெளியிடுகின்றார். இந்நூலின் முதல் பிரதியினை காரணப்பட்டு K.V.S.இராமலிங்கம் அவர்கள் பெறுகின்றார்கள்.

இவ்விழாவில் பல்வேறு சன்மார்க்கிகள் சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்ற இருக்கின்றார்கள். ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் அமைந்துள்ள இந்நூலின் விலை
ரூபாய் 350/- க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு விழா அன்று இந்நூலை அன்பர்களுக்கு ரூபாய் 200/- க்கு ச.மு.க., அறக்கட்டளை வழங்க முன்வந்துள்ளது.

இந்நூலிற்காக முன்பதிவு செய்தவர்கள், தங்களது பெயர்களைக்கூறி இவ்வெளியீட்டு விழாவில் நூலினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்விழாவிற்கு வர இயலாதவர்களுக்கு நூல் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தாங்கள் அனைவரும் வடலூர் வந்து கலந்துக்கொண்டு, அன்றைய தினம் நிகழும் மாதப்பூச ஜோதி தரிசனத்தையும் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.

 

TMR85.jpg

TMR85.jpg

TMR86.jpg

TMR86.jpg

TMR87.jpg

TMR87.jpg

TMR88.jpg

TMR88.jpg

5 Comments
Anandha Barathi
Dear Ayya,

My best wishes for this great function and please provide your Bank account details and address for online shopping.

Thanks.
Friday, December 19, 2014 at 04:30 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
இந்த நூல் எங்கும் கிடைக்கப் பெறாத நிலையில், இதனை பதிப்பு செய்து வெளியீடு செய்வது மிகவும் நன்று. திருநெல்வேலியில் சன்மார்க்க அன்பர் திரு சங்கரலிங்கம் அவ்ர்கள் இந்த நூலினைப் பொன்போலப் பாதுகாத்து வைத்துள்ளார். அப்போதுதான் இது போன்ற ஒரு நூல் உள்ளது என்பதே தெரிய வந்தது. வெளியீட்டிற்கு முனைப்புடன் செயல்படும் அன்பர்களுக்கு நன்றி.
Friday, December 19, 2014 at 06:06 am by Daeiou Daeiou.
TMR RAMALINGAM
Dear Aiya, (Mr.Anandha Barathi)
We also provide online shopping / purchasing facility to our Sanmarkies.
Please pay Rs.350/- to following bank account and send your address through SMS to following mobile number. After receiving your SMS, we will be sending a book to your address shortly. (Note: This progress is beginning on 07th January 2015 onwards)
Bank Account Details:
Account Holder Name: T.M.RAMALINGAM
Bank Name: ICICI Bank
Bank Branch: Chennai Armenian Street
Account No. 057401502097
IFSC Code: ICIC0000574
Mobile No. 9445545475

(OR)
Please send your M.O. for the following address, with your clear address,
T.M.RAMALINGAM
No.73-B, Sankaranaidu Street,
Thirupathiripuliyur,
Cuddalore – 607 002.

(Rs.350/- is including postage)
Sunday, December 21, 2014 at 12:56 pm by TMR RAMALINGAM
Anandha Barathi
Dear Ayya,

Thanks for sharing the details.
Monday, December 22, 2014 at 03:23 am by Anandha Barathi
karuneegar umapathy
very happy , every Sanmargi should buy this book. this is also one type of donation and encouraging the Sanmarga activity of the best sanmargi. very happy this function is organised by my Karuneegar Association in Vadalur. I was General secretary of that Association.
Tuesday, January 6, 2015 at 17:05 pm by karuneegar umapathy