T.M.R.
இராமலிங்க அகவல்
இராமலிங்க அகவல்
சற்குரு திருஅருட்பிரகாசர் அருளாலும் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையாலும் "இராமலிங்க அகவல்" என்கிற இவ்வகவல், சுத்த சன்மார்க்க உலகிற்காக அருளப்பட்டுள்ளது. திருஅருட்பிரகாசரின் பெயரினையே இவ்வகவலுக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இவ்வகவலை என்னுளிருந்து சற்குரு புனைந்தவாரே நானும் (தி.ம.இராமலிங்கம்) புனைந்துள்ளேன்.

இவ்வகவல் நிலைமண்டில ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திருஅருட்பிரகாசர் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்" 1596 அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். தற்போது 2010 அடிகளைக் கொண்ட இந்த "இராமலிங்க அகவல்" அருளப்பட்டுள்ளதால், சுத்த சன்மார்க்க உலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் "இராமலிங்க அகவலை" மிஞ்சிய மிகப்பெரிய பாடல் இல்லை என்பது இதன் சிறப்பாக உள்ளது.

விடுத்த மூச்செலாம் விண்ணவ னாகிட
எடுத்த மூச்செலாம் என்னவ னாகிட

இரண்டும் கலந்து இல்லாத தாகிட
மிரண்ட தேகமும் மின்னொளி யாகிட

இரத்த மனைத்தும் இராமலிங்க மாயிட
மரத்தில் கலந்து மகாமந்திர மாயிட

அலறிய குரலெலாம் அன்பே ஓங்கிட
மலர்ந்த இதழ்களில் மருந்தை ஊட்டிட

தத்துவ மெலாம் தன்ன தாகிட
இத்தவம் புரிய அமிழ்து சுரந்திட 1980

புருவ நடுவில் புருடன் கலந்திட
அருவ நிலை அன்றே வந்திட

உடம் பெலாம் உண்மை யாகிட
சடங் களெலாம் சிரித் தெழுந்திட

காய முழுதும் கற்பூரம் மணந்திட
மாய மதங்கள் மருண் டோடிட

இதயத் துடிப்பு இனிதாய் நின்றிட
உதயமாகி உத்தமன் உரு வாகிட

எல்லா உலகும் எதிர்நின்று வணங்கிட
பொல்லாப் பசியும் பறந்தே சென்றிட 1990

எல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்திட
வல்லா னெனை வருவிக்க உற்றிட

தயவைப் பெற்றே தலைவனைப் பாடிட
நயந்த ஐந்தொழிலை நான்செய்ய தந்திட

ஆன்மக் குறிகளில் இன்பம் பொங்கிட
வான் கலந்தோரெலாம் வந்து வணங்கிட

சிலிர்த்த முடியொன்று செத்தாரை எழுப்பிட
வலிந்து சித்தெல்லாம் விரும்பி கொடுத்திட

என்னதவம் செய்தனோ என்றே முழித்திட
அன்ன தான மளித்தாய் என்றேமுழங்கிட 2000

வாழ்க நின்னருள் வளர்க நின்பொருள்
ஏழ்திரை விலக்கிய அருட்பெருஞ் ஜோதி

வாழ்க நின்கொடை வளர்க நின்படை
ஊழ்வினை அகற்றிய அருட்பெருஞ் ஜோதி

புனைந்த வாறே புனைந் துரைத்தேன்
எனையும் புனர்ந்த அருட்பெருஞ் ஜோதி

வாழ்கநின் மனிதம் வாழ்கநின் ஆன்மம்
வாழ்கநின் இயற்கை வாழ்கநின் இறைமை

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி 2010

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqbUlBZGQ5eDBNYlU/view?usp=sharing

3 Comments
venkatachalapathi baskar
சிதம்பரம் இராமலிங்கத்தின் மீது தி.ம.இராமலிங்கம்கொண்ட அன்பினால் நமது வள்ளல்பெருமானுடைய அருள் கிடைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இராமலிங்க அகவல் தற்கால சன்மார்க்க உலகில் ஒரு அற்பதமாகும். தி.ம.இராமலிங்கம் ஐயா விருப்பப்பட்டால் தங்களுடைய செல்பேசி எண்ணை தெரிவிக்கலாமே.
Saturday, October 25, 2014 at 09:10 am by venkatachalapathi baskar
TMR RAMALINGAM
தங்களது கருத்துக்கு நன்றி ஐயா. எனது கைப்பேசி எண் 9445545475.
Monday, October 27, 2014 at 16:12 pm by TMR RAMALINGAM
Nagarajan Natarajan
முழு அகவலையுந் தரவிறக்கிப் படித்தேன். மகிழ்கின்றேன். பகிர்ந்த உமக்குக் கோடானு கோடி நன்றிகள். வாழ்க வள்ளன்மை
Sunday, April 5, 2015 at 17:18 pm by Nagarajan Natarajan