Badhey Venkatesh
36 படி நிலை
நீண்ட ஆயுளுடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ
காலை யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி
மாலை நடைப் பயிற்சி
உணவுக் கட்டுப்பாடு
என பயின்று வருகின்றேன் அனுதினமும்

மௌனம் பேசியது

இதெல்லாம் செய்தாலும்
ஆயுள் அதிகபட்சமாக
நூறொடு இருபது ஆண்டுகள் மட்டுமே
அசுத்த மாயா தத்துவங்களில் தோய்ந்து இருப்பதனால்

என் செய்வது என்று வினவினேன்???

அசுத்தத்திலிருந்து சுத்தாசுத்தமாம் வித்தியா தத்துவத்திற்கு ஏறு

இலட்சக்கணக்கான ஆண்டுகள் வாழலாம் என்றது

போதாது என்றேன்

இன்னும் மேலேறி
சுத்த தத்துவமாம் சிவதத்துவத்திற்கு வா

கோடிக்கணக்கான  ஆண்டுகள் வாழலாம் என்றது

இதுவும் போதாது என்றேன்

முப்பத்தறுவரையும் கடந்து
என்னை அடைந்து
என்னில் கலந்து விடு
என்னில் கரைந்து விடு
  காலத்தைக் கடக்கலாம்
காலாதீதன் ஆகலாம்
நித்தியன் ஆகலாம் சத்தியன் ஆகலாம்
என்றென்றும் வாழலாம் என்றது

அது போதும் என்றேன்.



 
BG Venkatesh
Jithendra Gurumurthy
Can you please explain about this 36 concept more. I am ignorant at this concept.
Friday, April 18, 2014 at 04:36 am by Jithendra Gurumurthy