ramu sengeni
ஐந்தாம் திருமுறை.
மான் எழுந்தாடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினந்
தான் எழுந்தாலும் எழுகவேன்றே என் தளர்வை எலாம்
ஊன் எழுந்தார்க்க நின்பால் உரைப்பனன்றி ஊர்க்குரைக்க
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே.

உரை :

"மானை ஏந்திய கரத்தை உடையவனே! நின் சாந்தமான மனத்தில் சினம் எழுந்தாலும் எழட்டுமென்று எழுந்து நின்று என் தளர்வை எல்லாம் உன்னிடம் கூறுவேனேயன்றி, மற்றோருக்கு உரைக்க, நான் எழுந்தாலும், என்நா உரைக்க முனையுமோ?"



உரை ஆசிரியர்:
பா.கமலக்கண்ணன்.
16, கிழக்குத் தெரு, பழையசாரம், பாண்டிச்சேரி 605 013. (99524 18046)
Comments closed for this topic