SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இன்றும் என்னுடன் வள்ளலார் 7
1 6. .நல்ல செயலுக்குப் பாராட்டா. வள்ளலார் அருளால் தானாகவே நடக்கும்.

30-4-2000 மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை வந்தேன். தேனாம்பேட்டை எங்கள் சன்மார்க்க சங்கத் தலைவராக இருந்த திரு சுந்தரம் அவர்கள் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஆனால்  ஓர் அன்பர் பாலு மட்டுமா போனார் அவர் போன ஆகாயவிமானத்தில் நானூறு பேருக்குமேல் போனார்கள். அவர்கள் எல்லாருக்கும் அல்லவா பாராட்டு நடத்த வேண்டும் என்று கிண்டல் செய்தார்.தலைவர் ஐயா அவர்கள் வருத்தத்துடன் பேசாமல் இருந்துவிட்டார். அந்த ஆண்டு மே மாதம் வடலூரில் இசை விழா நடந்தது. நானும் போயிருந்தேன்.இசை விழாவில் மூன்றாம் நாள் தருமச் சாலையில் பெருமானாருக்கு முன்னால் கலைஞர்கள் அனைவருக்கும் இசைச் சங்கத் தலைவர் சால்வை போர்த்திக் கவுரவிப்பார். இசைச்சங்க நிர்வாகி திரு விஸ்வநாதன் அவர்கள் என்னை அழைத்து அங்கே உட்காரும்படிச் சொன்னார். அங்கே உட்கார எனக்குத் தகுதி இல்லை என்று நான் மறுத்தேன். அவர் பரவாயில்லை வந்து உட்காரலாம் என்று வற்புறுத்தி உட்கார வைத்தார். இசைச் சங்கச் செயலாளர் பாடியவர்கள்,பக்க வாத்தியக் கலைஞர்கள் பெயர்களை வேகமாக வாசித்து விட்டார்.இசைச் சங்கத் தலைவர் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை போர்த்திக்கொண்டு வந்தார். எனக்கும் ஒன்று போர்த்த வந்தார். நான் அவரிடம் "ஐயா நான் பாடியவனும் அல்ல பக்க வாத்தியம் வாசித்தவனும் அல்ல. அவர் வாசித்த லிஸ்டில் என் பெயர் இல்லை. எனவே எனக்கு வேண்டாம்" என்றேன். அவர் சற்றும் தயங்காமல் நம் பெருமானாரைக் காட்டி அவர் லிஸ்டில் நீங்கள் இருக்கின்றீர்கள் இந்த லிஸ்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை என்றார். அப்போது அங்கிருந்த திருமதி சிவகாம சுந்தரி அம்மாள் அவர்கள் என்னைப் பார்த்து நீங்கள்தான் வள்ளலார் லிஸ்டில் இருக்கின்றீர்களே என்று சொல்லி அவரைப் பார்த்து இவருக்கும் ஆடை போர்த்துங்கள் என்றார். எனக்கும் வள்ளலார் சந்நிதியில் பொன்னாடை போர்த்திப் பாராட்டு கிடைத்துவிட்டது. சங்கத்தில் தராவிட்டால் என்ன? வள்ளலார் சந்நிதியில் கிடைத்ததே போதாதா.என்னை வள்ளலார் பாராட்டினார்.

1 7. .எனக்கா துன்பம் வரும், வள்ளளார்தான் இருக்கின்றாரே.

April 2008. நான் மலேசியா செல்லும்போதெல்லாம் பினாங்கும் சென்று வருவேன்.பினாங்கில் குரு சுந்தரம்ஐயா  என்பவர் தயவு இல்லம் நடத்தி வருகிறார். சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வியாழனன்றும் அருட் பெருஞ் சோதி அகவல் பாராயணம் செய்வார். முடிந்ததும் அகவலுக்கு விளக்கம் சொல்வார். பெரியவர்களும் கலந்து கொள்வார்கள். அந்த ஆண்டு என்னை யும் வியாழனன்றே வரச்சொன்னார். நானும் புதனன்று போனேன். பேருந்து நிலையத்தில் என்னை வரவேற்ற குரு ஐயா இன்று பக்கத்துக் கிராமத்தில் அம்மன் கோவிலில் உங்கள் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு நாளை மாலை தயவு ஆறுமுகம் ஐயா வீட்டில் உணவு எடுத்துக் கொண்டு சரியாக ஆறு மணிக்கு தயவு இல்லத்திற்கு வந்துவிடுங்கள். கடந்த ஆறு மாதங்களாக லிப்ட் வேலை செய்யவில்லை. ஐயா பெயரைச் சொல்லிக்கொண்டே படிகள் வழியாக ஏறி வந்துவிடுங்கள் என்றார். நீங்கள் இருபத் தோராவது மாடியில் அல்லவா வள்ளலாரை வைத்து இருக்கின்றீர்கள்.என்னை வள்ளலார் அத்தனை மாடிகள் நடந்து ஏறி வரும்படிச் செய்வாரா என்று கேட்டேன். நாங்கள் ஆறு மாதமாக நடந்துகொண்டு இருக்கின்றோம். ஒரு நாளாவது நீங்கள் நடந்து வரக்கூடாதா என்றார். நீங்கள் நடந்து வரலாம்.என்னை ஐயா அப்படி நடக்கவிடுவாரா என்றேன். நடக்க விட மாட்டார் என்றேன். சவாலா விடுகிறீர்கள் என்றார்.அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர் சொன்னதுபோல் புதனன்று கிராமத்திற்குப் போய் அம்மன் கோவிலில் பேசிவிட்டு மறுநாள் மாலை ஆறுமுகம் ஐயா வீட்டில் உணவு எடுத்துக்கொண்டு காத்திருந்தேன். சரியாக ஐந்தரை மணிக்குக் குரு ஐயா தொலைபேசியில் "சவால் விட்ட முபா ஐயா அவர்களே இதுவரை லிப்ட் வேலை செய்ய வில்லை. படி ஏறித்தான் வரவேண்டும். சிரமம் பாராமல் வந்துவிடுங்கள். இங்கு நாங்கள் எல்லோரும் உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்றார். நான் சற்றும் கவலைப்படாமல் போனேன். மாடிப் படி அருகே போனேன். ஒருவர் ஓடிவந்து ஐயா சற்று பொறுங்கள் என்றார். நான் நின்றுவிட்டேன். முதல் மாடிக்குச் சென்று லிப்டில் கீழே வந்து வாருங்கள் என்றார். நான் லிப்டில் ஏறி இருபத்தோராவது மாடிக்குச் சென்றேன். அங்கே குரு அவர்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கி நாற்காலியில் உட்காரவைத்து என்னுடைய காலில் வெந்நீர் ஊற்ற ஆரம்பித்தார். நான் அவரைத் தடுத்து ஐயா நான் மாடிப்படி ஏறி வரவில்லை. லிப்டில்தான் வந்தேன் என்றேன். அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.. என் பின்னால் வந்த லிப்ட்மேன் லிப்டில்தான் நான் அவரை அழைத்து வந்தேன் என்றார். இதைக் கேட்ட குரு அவர்கள் கதறிக் கதறி அழுதார்கள். ஆறு மாதங்களாக வேலை செய்யாத அந்த லிப்ட் இன்று அதுவும் நீங்கள் வந்தவுடன் நீங்கள் சொன்னது போலவே வேலை செய்ததா.உண்மையிலேயே பெருமானார் உங்கள் பக்கம் இருக்கிறார். உங்களிடம் அவர்மீது இருக்கின்ற நம்பிக்கையும் நீங்கள் அவர்மீது கொண்டிருக்கும் பக்தியும் எங்களிடம் இல்லை என்றார்.இன்றுவரை இன்னும் நிறைய அனு ப வங்கள்.உள்ளன.நான் எழுதி உள்ளதே ஏராளம்.உங்களுக்கு சலிப்புதான் வரும்.நான் ஏன் வள்ளலாரை வணங்குகிறேன் என்பதையும் மற்றவர்களையும் வணங்கச் சொல்லுகிறேன் என்பதையும் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.வள்ளலாரை மட்டும் வணங்குங்கள் இன்பமாக வாழ்வீர்கள்.என் அனுபவங்களை படித்தவர்களுக்கு நன்றி.வள்ளலார் நமக்கு என்றும் துணையாய் இருப்பார்.

7 Comments
venkatachalapathi baskar
நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். எங்களுக்கு உங்களின் ஆன்மிக அனுபவங்களை படிப்பதற்கோ, கேட்பதற்கோ ஒருபோதும் சலிப்பு ஏற்படாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை படிப்பதன் மூலம் எங்களுக்கு வள்ளல்பெருமானின் மீதுள்ள பக்தியும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.


தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு பல கோடி நன்றிகள்.
Wednesday, December 25, 2019 at 14:07 pm by venkatachalapathi baskar
manohar kuppusamy
On entering into god path miracle can be happened for every person life
We should not focus on that and we can't make advertisement

On senior person iyya
Kindly avoid on this type of advt please please
Friday, December 27, 2019 at 08:02 am by manohar kuppusamy
venkatachalapathi baskar
The miracles is not from MUPA but it is to MUPA from our VALLALPERUMAN, so, he has to share for the whole of Sanmarga society.
Sunday, December 29, 2019 at 06:01 am by venkatachalapathi baskar
Muthukumaaraswamy Balasubramanian
DEAR Sir do you feel that this is an advertisement.VERY SORRY .I DONT EXPECT
ANY GAIN.
Sunday, December 29, 2019 at 15:39 pm by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
Yes. This also the way of advertisement
Monday, December 30, 2019 at 16:20 pm by manohar kuppusamy
manohar kuppusamy
We should follow this
True mercy
True compassion
True karunai

True dhaya

And. Sathyam sathyam sathyam
Monday, December 30, 2019 at 16:42 pm by manohar kuppusamy
venkatachalapathi baskar
புரிதலில் ஏற்படும் வேறுபாடு மனிதர்களை விதவிதமாக எழுதச் சொல்கிறது. இது விளம்பரமே என்றாலும்கூட நடந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் வள்ளல் பெருமானின் புகழை பாடுவதாக இருப்பதால் இதை ஏற்றுக் கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.
Tuesday, December 31, 2019 at 11:23 am by venkatachalapathi baskar