SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஆன்மீகத்தில் விஞ்ஞானம்
ஆகாய விமானத்தில் பறந்து பார்த்தோம் கைலாயம் எங்கும் காணப்படவில்லை.
கப்பலில் கடல் எல்லாம் தேடிப் பார்த்தோம் திருப்பாற்கடலைக் காணவில்லை
சொர்க்கமும் நரகமும் எத்தனையாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன?
விக்ஞானத்தால் நிரூபிக்க முடியாத ஆன்மீகத்தை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?
மேலே உள்ள வினாக்களுக்கு ஆன்மீக வாதிகளின் விடை என்ன?
உண்மையிலேயே ஆன்மிகம் விக்ஞானத்திற்குப் புறம்பானதுதானா?
இராமாயணத்தில் சீதையை இராவணன் ஆகாய மார்க்கமாகத் தூக்கிக்கொண்டு போனான் என்று கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்த ரைட் சகோதரர்கள்தான் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்கிறது விக்ஞானம். சீதை ஒரு பயணி.இராவணன் விமான ஒட்டி. ஆகாயமார்கமாக ஒருவரை அழைத்துச் செல்லமுடியும் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டு எழுதமுடிந்திருக்கின்றது என்றால் ஆன்மீக அறிவு எவ்வளவு உயர்ந்தது .இதை மறுக்கமுடியுமா?

௨. ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களைப் பார்த்தால் சூரியன் மத்தியில் இருக்கும்.அதைச் சுற்றி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் காணலாம். இதன் பொருள் என்ன? அண்டத்தில் சூரியனும் அதைச் சுற்றி சந்திரன், செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்கள் வெவ்வேறு பாதையில் சுற்றி வருவது உண்மைதானே. நெப்டியூன், ப்ளூட்டோ என்ற இரண்டு கிரகங்களையும் இந்த நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். ஆனால் ஆன்மீகத்தில் ஒன்பது கிரகங்கள் என்று முன்பே காட்டப்பட்டுள்ளது (ராகு, கேது என்று பெயர் வைத்திருந்தார்கள்)ஆன்மீக அறிவானது விஞ்ஞான அறிவை முந்திக்கொண்டதே. மேலும் ஆண்டுதோறும் பஞ்சாங்கம் எழுதும் ஐயர் டேலேச்கோப் முதலிய கருவிகள் வைத்துக்கொண்டா சூரிய கிரகணம் இந்த நாளில் இத்தனை மணி நேரத்தில் பிடிக்கும் இந்திந்த ஊர்களில் தெரியும் என்று எழுதுகிறார்? எல்லாம் ஆன்மீக அறிவு ஐயா


3 வானத்தில் சந்திரன் ஒவ்வொரு நாளும் உதயமாகும்போது வெவ்வேறு நட்சத்திரத்தின் பக்கத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.இன்று கிருத்திகை என்றால் அன்று வானத்தில் சந்திரனைப் பாருங்கள். பன்னீர் சோம்பு போல் ஆறு நட்சத்திரக் கூட்டத்தின் பக்கத்தில் சந்திரன் இருக்கும், அடுத்த நாள் v போன்ற நட்சத்திரக் கூட்டத்தின் பக்கத்தில் சந்திரன் இருக்கும். அதை ரோகினி என்பார்கள். 27 நாட்கள் கழிந்ததும் சந்திரன் முதல் நட்சத்திரமாகிய அஸ்வினி பக்கத்தில் வந்துவிடும். பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும் .இருபத்து ஏழைப் பன்னிரண்டால் வகுத்தால் இரண்டே கால் ஆகும், இந்த இரண்டேகால் நட்சத்திரத்தையே ராசி என்றார்கள். இது சூரியனின் போக்கு ஆகும். இது ஆன்மிகம் இல்லையா?

கிராமங்களில் வாசலில் காலையில் சாணம் தெளிப்பார்கள். ஏன் தெரியுமா? காலில் செருப்பு இல்லாமல் நடந்தால் எந்த வெய்யிலும் சுடாது.அதுமட்டுமல்ல சாணம் ஒரு கிருமி நாசினி. அதேபோல் வாயிற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுவார்கள். ஏன் ?இவை இரண்டும் கிருமி நாசினி. எந்த வியாதிக் கிருமியும் வீட்டினுள்ளே வராது இப்பொழுது யாரும் மஞ்சள் பூசுவது இல்லை மஞ்சள் கலர் பெயின்ட் அடிக்கிறார்கள்.கிருமிகளால் வியாதிகள் வருமா வராதா 
2 Comments
manohar kuppusamy
Whether r u following ??¿

Please go and visit coimbatore and other villages in tamilnadu regarding your conclusion statement of turmeric
Friday, December 27, 2019 at 09:01 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
what do you mean? Pl clearly explain your commemnts.
Sunday, June 7, 2020 at 12:25 pm by Muthukumaaraswamy Balasubramanian