SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
1 0 .அருளியல் மட்டுமல்ல உலகியலிலும் அவரே துணை.1 9 8 0

நான் தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்தில் உள்ள நம் வள்ளற் பெருமானாரின் உருவச் சிலைக்கு ஒவ்வொரு ஞாயிறுதோறும் வேறு ஆடை உடுத்தி ,மாலை இட்டு அகவல் ஓதி ,மலரால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதுண்டு. சங்கத்தை நிறுவிய திரு கோவிந்தராஜுலு நாயக்கர் அவர்கள் இந்தப் பணியை என்னிடம் 1972ம் ஆண்டு ஒப்படைத்தார்கள். என் காலம் உள்ளவரை தவறாமல் செய்வேன் என்று அவருக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன். நான் கருவூலக் கணக்குத் துறையில் கணக்கு அலுவலராகப் பணி புரிந்த காலம். 1978 ம் ஆண்டு. எங்கள் இயக்குனர் என்னை ஊட்டிக்கு மாற்றி உத்தரவு போட்டுவிட்டார். நான் அவரிடம் நேரில் சென்று ஐயா நான் சில ஆண்டுகளாக ஞாயிறுதோறும் பூஜை செய்கிறேன். நான் ஊட்டிக்குப் போனால் அந்தப் பூஜை தடைபட்டுவிடும் .அதனால் இந்தப் பணி மாற்றல் உத்தரவைத் தயவு செய்து ரத்து செய்து சென்னையிலேயே எங்காவது என்னை மாற்றுங்கள் என்று விண்ணப்பித்தேன். உன் சொந்த விவகாரத்திற்கு எல்லாம் நான் கவலைப்பட முடியாது. ஒழுங்காக ஊட்டி போகிற வேலையைப் பார் என்று சொல்லிவிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்வாகப் பிரிவிற்குச் சென்று உத்தரவு தயாராய் உள்ளதா என்று கேட்டேன். இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள்.நான் உடனே சங்கத்திற்கு வந்தேன். வள்ளலார் முன் உட்கார்ந்து அழுதேன். புலம்பினேன். ஐயா என்னை ஏன் ஊட்டிக்கு அனுப்புகிறீர்கள்? நான் செய்கின்ற பூஜை உங்களுக்குத் திருப்தி இல்லையா? வேறு யாராவது பூஜை செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகின்றீர்களா என்று அழுதேன். ஒரு மணிநேரம் அவர் காலைப் பிடித்துக்கொண்டு அழுதேன். பின்னர் அலுவலகம் சென்றேன். நிர்வாகப் பிரிவிற்குப் போனேன். உத்தரவு தயாரா என்று கேட்டேன். இயக்குனர் உங்களை வந்து பார்க்கச் சொன்னார் என்று சொன்னார்கள். போய் அவரைப் பார்த்தேன். உன்னை நான் சென்னை மாநகராட்சிக்கு மாற்றிவிட்டேன். நீ ஊட்டி போகவேண்டாம் என்றார்.என்னுடைய மாற்றல் உத்தரவை ரத்து செய்ய நான் யாருடைய (மனித தரத்தில்) சிபாரிசையும் கோரவில்லை. பெருமானிடம் முறை இட்டேன். நான் மீண்டும் அலுவலகம் போவதற்குள் அதாவது நான் வள்ளலாரிடம் முறை இட்டுக்கொண்டிருந்தபோதே என்னுடை ய மாற்றல் உத்தரவு ரத்து ஆகி சென்னை மாநகராட்சிக்கு மாற்றல் உத்தரவு தயார் ஆகிறது. இது எம்பெருமான் என்னுடன் இருக்கிறார் என்றும் என் வேண்டுதல் அவரை அடைகிறது. அவரும் அதை நிறைவேற்றுகிறார் என்றும் நிரூபிக்கின்றதல்லவா இந்த மாற்றம் யார் செய்தது. வள்ளலார்.வள்ளலாரே

2 Comments
Hariharan Elumalai
இது போன்ற செய்திகள் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
Wednesday, December 26, 2018 at 00:54 am by Hariharan Elumalai
venkatachalapathi baskar
ஐயா, இதுபோன்று தங்களுக்கு நடந்த ஆன்மீக (தவம்) அனுபவங்களையும் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Wednesday, December 26, 2018 at 11:57 am by venkatachalapathi baskar