SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்கலாமே
வள்ளலார் தந்த அறிவுரை. ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய பேறுகள் நான்கு ஆகும். அதாவது ஏமசித்தி,சாகாக்கல்வி,தத்துவ நிக்கிரகம் செய்தல்,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். முடிவாக கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதலே.அதாவது கடவுளோடு சென்று கலப்பது என்பதல்ல. கடவுள் நிலை எது என்று அறிந்து அந்த நிலையை நாம் அடைதல்.அதாவது அந்த கடவுளுக்கு சமமாக நாமும் அடைதல்.கடவுள் நிலை என்ன என்று அறிந்து அந்த மயமாக நாமும் ஆதல் வேண்டும். இதுவே வள்ளலார் காட்டிய வழி. வள்ளலார் கடவுளோடு போய்க் கலக்கவில்லை. கடவுள் நிலை அறிந்து வள்ளலாரும் அந்த நிலையைப் பெற்றார். எனவே வள்ளலாரும் கடவுளாகவே இருக்கிறார். அகவலில் தந்தை என்ற பகுதியைப் படித்துப் பார்த்தால் ஆண்டவனிடம் உள்ள அனைத்தும் செங்கோல் உட்பட வள்ளலார் பெற்று இறைவனாகவே விளங்குகிறார். அழிவற்ற தேகம். அளவு கடந்த ஆற்றல் எல்லாம் வள்ளலார் பெற்றதனால் அவரும் கடவுளாகவே உள்ளார். அவரை வணங்கு வதுதான் முறை.
இந்த உலகில் உள்ள அனைவரும் எண்ணைத் துதிக்கும்படியே இறைவன் வைத்திருக்கிறான் என்று வள்ளலாரே பாடியுள்ளார். வள்ளலாரைத் துதிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை . எனவே அவரை வணங்குவதே சரி. இனியும் வாதம் வேண்டாம். யாரும் யாருக்கும் அறிவுரை அளிக்க வேண்டாம். செய்ததே அளவிற்கு அதிகம்.எனவே வள்ளலாரை வணங்குவது அவரவர் விருப்பம்போல் நடக்கட்டும்
5 Comments
venkatachalapathi baskar
ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.



மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
Saturday, September 29, 2018 at 14:12 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
மேற்கண்ட பாடல்களில் வரும் 'உட்கலந்தான் என் உடையவனே', 'உட்கலந்தான் மன்றில் என்னப்பனே' ஆகிய வரிகளை கவனிக்கவும்.
Saturday, September 29, 2018 at 14:16 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
Sunday, September 30, 2018 at 04:51 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
மேற்கண்ட பாடல்களுக்கு தங்களது விளக்கத்தினை வேண்டுகிறேன்.
Saturday, October 20, 2018 at 03:19 am by venkatachalapathi baskar
Muthukumaaraswamy Balasubramanian
அன்புள்ள ஐயா எனக்கு ஒரு விளக்கம் தர முடியுமா. அவர் உடம்புக்குள்ளேயே உள் ஒளியாக இருந்த இறைவன் அவரது உடம்பில் கலந்தானா அல்லது வெளியிலே இருந்து ஓர் இறைவன் வந்து அவரது உடம்பில் கலந்தானா.
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி v என்கிறது அகவல்.இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.வள்ளலார் உடம்போடுதான் இருக்கின்றார் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதையும் சற்று பாருங்களேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும். நன்றி முபா.
Sunday, December 23, 2018 at 10:55 am by Muthukumaaraswamy Balasubramanian