SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இறைவனை எல்லோராலும் தரிசிக்க முடியுமா?
இறைவனை எல்லோராலும் தரிசிக்க முடியுமா?
எல்லா ஆலயங்களிலும் :"இந்துக்கள் அல்லாதார் உள்ளே நுழையக்கூடாது "என்ற அறிவிப்புப் பலகையை நாம் காண்கிறோம். வடலூர் ஞான
சபையில் வள்ளலாரும் ஓர் அறிவிப்பை நுழை வாயில் கல்லிலே செதுக்கி வைத்திருக்கின்றார்.அது என்ன தெரியுமா?"கொலை புலை தவிர்த்தவர்கள்
மட்டுமே உள்ளே நுழையலாம் " இதன் கருத்து என்ன? பிற உயிர்களைக் கொன்று மாமிசம் உண்போர் இறைவனை வணங்கவே தகுதி அற்றவர்கள் என்பதே ஆகும். இந்த உண்மையை எவ்வளவு பேர் ஏற்றுக்கொள்வார்கள்? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது முக்கியமல்ல .உண்மையை மக்களுக்குச் சொல்லியே தீரவேண்டும் என்ற உறுதியில் வள்ளலார் இருந்தார். மேலும் . மக்கள் ஏதேதோ விரதங்கள் இருக்கின்றார்கள் .உண்மையான விரதம் கொல்லாமையே என்றார்