SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் ஞான சபை நிறுவினார்ம்

வள்ளலார் ஞான சபை நிறுவினார்
இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனை வணங்க ஆலயங்கள் அமைத்தார்கள். அதுவும் ஆகம விதிப்படி. ஆலயத்திலே சடங்குகள் பல ஏற்படுத்தினார்கள். நமது உடம்பைத்தான் ஆலயமாக அமைத்தார்கள்
என்ற உண்மை ஆலயத்திற்குச் சென்று வழிபடும் கோடிக்கணக்கான மக்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே27 (திரு மந்திரம்) திருமூலர் கூறியிருக்கிறார்.
ஆனால் எவ்வளவு பேர் திருமந்திரம் படித்து அதன் பொருளை உணர்ந்திருக்கின்றனர் மனித உடம்பிலே நெற்றிப்பொட்டு அதாவது
புருவமத்தியே இறைவன் இருக்குமிடம் என்று விளக்கவே ஆலயங்கள் அமைக்கப்பட்டன. வள்ளலார் இறைவனை வழிபாடு செய்ய முந்தைய அருளாளர்களிடமிருந்து மாறுபட்டு ஓர் ஞானசபையை நிறுவுகிறார். வள்ளலார் நிறுவிய ஞானசபை ஓர் ஞான விளக்கமாகும்
எண்கோண ஞான சபையின் இரு பக்கத்திலும் சிற்சபை பொற்சபை அமைய அவற்றைச்சுற்றி மூச்சுக் காற்றைக் குறிக்கும் இரும்புச் சங்கிலிகள் வேலி போல் இருக்க ,ஒவ்வொரு கோணத்திலும் இரண்டு ஜன்னல்களும் இடையே கதவும் அமைக்கப்பட்டுள்ளன. முன் கதவைத் திறந்தால் திரைகள் தெரியும் .திரைகளை நீக்கிகொண்டால் இறைவனை ஒளியாகத் தரிசிக்கலாம் என்ற விளக்கத்தை ஞானசபை தெரிவிக்கின்றது. இந்த அமைப்பு உலகில் எங்கும் காணமுடியாதது