SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்க்க சிந்தனை சத்விசாரம் தொடங்கலாமா

சன்மார்க்க அன்பர்கள் சிந்தனைக்கு

1. இந்திரிய ஒழுக்கம் என்ற பகுதியில் மலம் தடைபடுமானால் சரபேத ஹஸ்த ஸ்பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கணப் பிரணவ தியானத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளுதல் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தேவை.
2.நமுதன் முதல் பல நன்மையுமாம் என்ற வரி அருட்பாவில் உள்ளது. நமுதன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.
அகராதியில் கிடைக்கவில்லை.
3.மரணமிலாப் பெருவாழ்வு என்பதன் விளக்கம் என்ன? நமது பெருமானார் அதை அடைந்தார்களா. அடைந்தார் என்றால் அவர் உடலுடன் இருக்கிறாரா? அவர் அந்த வாழ்வை எப்படி அடைந்தார்?அவர் அதற்குச் செய்த முயற்சி என்ன?
4. வள்ளலாருக்குப்பின் யாராவது அந்த மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கின்றார்களா?
5. யாராவது அடைந்திருந்தால் அவர் யார்? யாரும் அடையவில்லை என்றால் ஏன் அடையவில்லை.
6.நம்மால் அடையமுடியுமா? முடியாதென்றால் சன்மார்க்கம் என்?
7.அடைய முடியும் என்றால் என்னென்ன செய்யவேண்டும்
வள்ளலாரின் இணைய தளத்தில் பங்கேற்கும் அன்பர்கள் இந்த விளக்கங்களில் பங்கு கொண்டால் வழி தெரியாத என்னைப் போன்றோருக்கு வழி காட்டிய புண்ணியம் கிடைக்குமே? நன்றி வந்தனம்.

5 Comments
Damodaran Raman
அன்பர்களே,வணக்கம்.வள்ளலார் மரணமிலாப் பெரு வாழ்வு வாழ உல மக்களை அழைத்தார் என்பதால் அதைப் பற்றிப் பேசலாம் எனக் கருதுகிறேன்.
3.தூல அதவது நாம் கண்கூடாகக் காணும் உடம்பை விட்டுப் பிரிதலே மரணம்.தூல உடம்பைச் சித்தியல் சன்மார்க்கச் சேர்ப்பினால் நித்திய மாக்கலாம் என்பது வள்ளலார் வாக்கு.நரை,திரை,பிணி,மூப்பு,சாக்காட்டால் அழியும் தூல உடம்பை அழியா உடம்பாக மாற்றுவதே மரணமிலாப் பெரு வாழ்வு.வள்ளலார் தம் உடம்பை அழியா உடம்பாக்கினார் என்பது காற்றாலே புவியாலே என்னும் அருட்பாவில் தெளியலாம்.வள்ளலார் பிரணவ தேகத்தில் இருக்கலாம்.ஞான தேகத்தில் இருக்கலாம்.உண்மையை வள்ளலாரும் இறைவனும் மட்டுமே அறிவார்கள்.இதனை உறுதிப் படுத்தும் தகுதி மரணமுறும் நம் போல்வோர்களுக்குக் கிடையாது. வள்ளலார் சாகாக்கல்வியைக் கற்றதால் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்றார்.சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும்.வேகாத காலாதி கண்டு கொண்டு விளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில் என்பதை நடராசபதி மாலை 28-ஆம் பாடலில் தெளியலாம்.ஊருக்கு மட்டும் உபதேசிக்காமல் இந்த மெய்த்தொழிலை வள்ளலார் செய்தார்.
4.வள்ளலாருக்குப் பின் ஊர் உலகு அறிய மரணத்தை வென்றாராக யாரும் இருக்க வில்லை.
5.ஏன் அடைய வில்லை என்றால் வள்ளலார் கூறிய மெய்த்தொழிலை உண்மையாக அறிந்து உரிய முயற்சி செய்து அதில் வெற்றி பெற வில்லை.
6.நம்மால் அடைய முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.அதற்கு நாம் திண்ணியராக இருக்க வேண்டும்.சாகாக்கல்வியை வெளிப்படுத்துவதுதான் சன்மார்க்கம்.இந்தச் சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திரு மூலர் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும் என்பது உரைப்பகுதி. திருமந்திரமும் பதினெண் சித்தர் நூல்களும் சாகாக்கல்வியை வெளிப்படுத்துகின்றன.
7.சாகா நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?முதலில் திருமந்திரம்,பதினெண் சித்தர் நூல்களில் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அட்டாங்க யோகத்தை அறிய வேண்டும்.அதன்படி முயற்சி செய்ய வேண்டும்.சாகாத்தலை என்பது மூச்சை ஒடுக்கலால்(கும்பகத்தால்)பெறப்படும் யோக வெப்பம்.இப்படிப் பழகி வந்தால் வாசி மேல் நோக்கி வாய்,மூக்கு வழியே வெளியேறாமல் உடம்புக்குள்ளேயே ஒடுங்கும்.ஒடுங்கிய வாசியே (வேகாக்கால்) சுழுமுனையின் மேல் வாசலான புருவ நடு(நெற்றிக்கண்)வைத் திறக்கும். திறந்து நாடி நாதத்தை வேகாக்கால்தான் எழுப்பும்.நாடி நாதத்தை எழுப்பினால் போகாப்புனல் என்னும் அமுதம் மூளையில் சுரக்கும்.இந்த அமுதத்தை உண்டால் மட்டுமே மரணத்தைத் தடுக்க முடியும்.இந்த அனுபவங்களை வள்ளலார் அருட்பாக்களும் உறுதி படுத்துகின்றன. இறையருள் பெற்றால் மட்டுமே சுழுமுனையைத் திறக்க முடியும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் எளிதில் இறையருளைப் பெறலாம்.

சத்விசாரத்தால் சாகாக்கல்வி என்னும் ஞான சித்தியைப் பெறலாம்.

ஞான சித்தியினால் மரணத்தை வென்று சித்தனாகலாம்.வாழ்க.வாழ்க.
Sunday, August 21, 2016 at 15:15 pm by Damodaran Raman
manohar kuppusamy
Dear Guru Thiru Mupa avargal, You are great master on this subject, how can you ask like this question. You can explain the answers for the above 7 questions. regards MANOHAR
Monday, August 22, 2016 at 04:47 am by manohar kuppusamy
manohar kuppusamy
Dear Brother Thiru Damodaran Raman, Good explanation.Further we should follow according to the path of THIRU ARUTPRAKASA VALLALAR --- PRACTICAL WAY-- THEN ONLY WE CAN ATTAIN IT.THANKS & REGARDS -MANOHAR
Tuesday, August 23, 2016 at 04:12 am by manohar kuppusamy
Thanigaivel R
First leaveit everything, assets, mobile,laptop, etc,etc, 24*7 doing meditation, give food to other's who was really poor,Help to others, always think aruperumjoythi only. Leave it all .automatically Vallar accepet your request.
Tuesday, August 23, 2016 at 13:59 pm by Thanigaivel R
ashok kumar saminathan
Uyir udalai vittu piriyum vagaigal (yenakku purindha varai, thavaru irundhaal thiruthungal)

1) Maranam - uyir uddalai vittu piriyum - uyirin nilai = theriyadhu - udal = puluthu mannaagiradhu

2)Jeevasamadhi - maranam varum naal theriyum - uyirin nilai = theriyadhu - udal = pulukkaathu + appadiye irukkum or Surungum - vazhi = Karunai + Vaasiyogam

3)maranamilla peruvazhvu :- Voon udalai oli udlaaga maatruvathu - Atharkkaana Vazhi = vega kaal + poga punal + Saaga thalai - Itharkkaana vazhi (Vega Kaal & poga punal)- unavai viduthu kaatrai unavaaga maatruvathu - itharkaanavazhi = Karunai+Vaasiyogam - Saaga thalai = Porulum Vazhiyum Theriyadhu
Thursday, August 25, 2016 at 16:25 pm by ashok kumar saminathan