SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
அருட்பாவில் உள்ள பாடல்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமா
இதோ சில வரிகள்.

வானத்தின் மீது மயில் ஆடக்கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி. 

இந்தக் கதவை மூடு இரட்டைத் தாழ்ப்பாளைப் போடு 

இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே 
விரவில் தனித்தங்கென்னை ஒரு கல் l
மேட்டில் ஏற்றியே விண்ணில் உயர்ந்த மாடத்திருக்க விதித்தாய் போற்றியே 

புற நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல் அறமுற வகுத்த அருட்பெருஞ்சோதி 

சத்தினி பாதம் தனை அளித்து எனை மேல் வைத்து அமுதளித்த மரபுடை த் தாயே 

காட்டை எலாம் கடந்து விட்டேன்  நாட்டை அடைந்து உனது கடிநகர்ப்  பொன் மதிர்க் காட்சி கண் குளிரக் கண்டேன்.


4 Comments
Damodaran Raman
ஐயா,மு பா அவர்களே!

வணக்கம்!

1.மயில் என்பது விந்து தத்துவம். குயில்,நாத தத்துவம்.வள்ளலார் விந்து தத்துவமே நாத தத்துவமானது என்றார்.இதன் விளக்கத்தைச் சிவ ஞான சித்தியார் சுபக்கம் 77-ஆம் பாடலில் காணலாம்.

2.பெரு வழக்கில் வரும் வரியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். சன்மார்க்கத்தில் நாயக நாயகி உணர்ச்சியில்(பாவத்தில்) பாடுவது வழக்கம். கோடையிலே இளைப்பாற்றி எனத்தொடங்கும் அருள் விளக்கமாலையில் ஆடையிலே எனை மணந்த மணவாளா என்று குறிப்பிடுவதைக் காண்க.ஆடையிலே என்பது ஆடுகையிலே என்று பொருள் கொண்டு விளையாடுகிற சின்ன வயதிலே என வேண்டும்.சின்ன வயதில் சேர்ந்தவர் என்ன காரணத்தினாலோ பின்னர் வரவில்லை.சங்கை என்பது சந்தேகம்.அவர் வருவாரா?மாட்டாரா என்று வள்ளலார் சந்தேகப்பட்டார்.ஆனால் இன்றோ வள்ளலார்தான் தன்னுடன் வருவாரோ இல்லையோ என்று பொன்னம்பலத்தே நடமிடும் நடராசப் பெருமான் சந்தேகப் படுகிறாராம்! இறைவன் வராத நிலைமையில் வள்ளலார் மீது பழி சுமத்தி ஊர் மக்கள் வம்பு பேசினார்களாம்.சின்ன வயதில் சேர்ந்தவர் என்றும் தன்னுடனேயே இருப்பார் என்று வள்ளலார் கருதினார். ஆனால் இறைவனோ இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவர் திரும்ப வரவே இல்லை.இதுதான் சூது!இன்று பெருந்தயவால் வந்தார்.முன்பு போல் மீண்டும் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போனாலும் போய் விடுவார்!எனவே கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட வேண்டும்.ஒரு தாழ்ப்பாளுக்கு இரு தாழ்ப்பாள் போட்டால் இறைவனை எங்கும் போக விடாமல் தடுக்கலாம் என்று வள்ளலார் கருதுகிறார். வள்ளலாரை நாயகியாகவும் நடராசப்பெருமானை நாயகனாகவும் பார்த்தால் பாட்டின் இனிமை விளங்கும்.

3.இரவு என்பது அறியாமை என்னும் ஆணவ மலத்தின் இருட்டு.பெரு வெள்ளம் என்பது வாழும் வாழ்க்கையே ஆகும்.கணியன் பூங்குன்றனாரும் யாதும் ஊரே எனத்தொடங்கும்(புற நானூறு-192) பாட்டில் நீர்வழிப் படூவும் புணைபோல்,ஆருயிர் முறைவழிப் படூவும் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் என்றார்.புணை என்பது தெப்பம், மிதவை.வள்ளலாரும் சிலரும் பெரு அறியாமை வாழ்வின் போக்கிலே வாழ்கின்றனர்.இன்னமும் அறியாமை வாழ்விலிருந்து விடுபடக் கல்மேடு என்னும் ஞான சித்தியை இறைவன் அருளினான்.இதன் மூலம் தலைப்பகுதி அனுபவம் பெற்றுச் சித்தன் ஆனார்.

4.அகவல் 513-514வரிகளில் கூறப்படும் கருத்து,பொருட்களின் தோற்றம்,நிலை,இறுதி என்னும் முத்தொழிலைப் பற்றி விளக்குவதாம்.

5.சத்தினி பாதம் என்பது சித்தாந்தத்திற்கே உரிய ஒரு கலைச்சொல்லாகும்.இதன் பொருள் திரு வருள் பதிதல் அல்லது திருவருள் வீழ்ச்சி.இறைவன் திருவருள் எப்படி உயிர்களிடத்தில் பதிகிறது என்பதைச் சத்தினி பாதம் விளக்கும்.மிகு மந்தம்,மந்தம்.தீவிரம்,அதி தீவிரம் என்னும் நால்வகை வழியில் அவரவர் பக்குவத்திற்கேற்ப இறையருள் பதியும்.வள்ளலார் அதி தீவிரம் என்னும் பிரிவில் அடங்குவார்.இறையருள் அதி தீவிரமாகப் பதிந்ததால், வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த மெய்த்தோழிலைப் புரிந்து போகாப்புனல் என்னும் அமுதத்தை உண்டார்.

6.காடு என்பது உலகியல் வாழ்வு.நாடு என்பது தலை அனுபவ வாழ்வு.ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிப் பாடல்களில் இதன் விளக்கத்தைக் காணலாம்.

நன்றி.

வணக்கம்.வாழ்க.
Tuesday, May 31, 2016 at 13:24 pm by Damodaran Raman
ஸ்வாமி  இராஜேந்திரன்
ஆஹா அருமையான விளக்கம்!
Thursday, June 2, 2016 at 03:51 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Anandha Barathi
Dear Damodaran Raman, Please provide your email address and phone number, One of anber from chennai request it.

Thanks.
Monday, June 13, 2016 at 14:48 pm by Anandha Barathi
Damodaran Raman
Dear Anandha Barathi,my e mail address:paranjudarnambi@gmail.com. Cell no:07200945042.,9360297482. Please visit my Face Book:DAMODARAN RAMAN(with VALLALAR picture).Thanks.
Tuesday, June 14, 2016 at 02:30 am by Damodaran Raman