SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
நன்றி மறப்பது நன்றன்று
சன்மார்கத்தில் உள்ள ஒரு சிலர் வள்ளலாரை வணங்க வெனடாம்  என்று அதி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.அவர் தன்னை வணங்க வேண்டாம் என்றுதான் சொன்னார். அவர் அப்படிச் சொன்னது அவாது பெருந்தன்மை அடக்கம்.அவரைத் தெய்வமாக வணங்கவே எவ்வளவோ தகுதிகள் இருந்தும் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்கள். மனுமுறை கண்ட வாசகத்தில் நாம் செய்யக்கூடிய 43 பாவங்களை வள்ளலார் பட்டியல் போட்டுத் தந்துள்ளார் அதில் 25 வது பாவம் குருவை வணங்கக் கூசி நின்றேனோ என்பது. தெய்வமாக வணங்க விருப்பம் இல்லாதவர்கள் அவரைக் குருவாகவாவது வணங்க வேண்டும். இல்லையேல் பாவம் செய்தவர்கள் ஆவார்கள். வள்ளலாருடைய ஒரிஜினல் படம் இல்லையே என்று காரணம் சொல்லலாம். சமயத்தில் சிவன்,முருகன், விநாயகர் முதலியோரை ஒரிஜினல் உருவம் வைத்தா வணங்குகிறார்கள். கையில் சூலம் வைத்தால்,சிவன் வேல் வைத்தால் முருகன் இப்படித்தானே வணங்குகிறார்கள். அந்த பண்பாடாவது நமக்கு வேண்டாமா.மனித உருவில்   கைகளைக் கட்டி முக்காடு போட்டால் வள்ளலார் .நன்றியுடன் வணங்க வைப்பதும் மனம்தான். மறுப்பதும் மனம்தான் . அவரவர்கட்கு அந்தந்த பலன்.
3 Comments
s raja k.s
பெரியவர்கள் என்று நம்மை மதிக்கிறார்கள் (என்னையும் சேர்த்து தான்). ஆனால் தெளிவாக பெருமானாரின் தனிக்கருத்துக்களை நாம் தராமல் ஏதேதோ சொல்கிறோம். தாங்கள் பெருமானாரின் மீது அளவு கடந்த பக்தியால் உங்கள் சொந்த கருத்தை உரைக்கீறீர்கள். நண்பர் தாமோதரனோ சைவ சமய நூல் திருமந்திரத்தைக் கொண்டு இங்கு தேவை இல்லாத விளக்கம் கொடுக்கிறார்.மற்ற ஒருவர் பெருமானார் தரிசித்த கோவில் என சமய படங்களை போடுகிறார். ஆனால் நேற்று வந்த சிலர் வயதில் சின்னவர்களாக இருந்தாலும் மிகத் தெளிவாக பெருமானாரின் நெறிக்குறித்து மதுரை,பெங்களூர்,அமெரிக்காவிலிருந்து கட்டுரைகளை தருகிறார்கள். எனது ஒத்த வயது உடையவர்களாக இருப்பதால் சொல்கிறேன். நாம் தோற்றவர்கள். மூப்பு,பிணி,துன்பம் பெற்றோம். பெற்றுக்கொண்டியிருக்கிறோம். தவறாக கையாள போய் தான் இவ்வளவும். ஒதுங்கியிருப்போம். சிறியவர்களுக்கு சரியாக சிந்திப்பவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்கியிருப்போம். நரை,மூப்பு பெற்றுள்ள நாம் வெற்றி பெற்றவர்கள் என்று எவரிடமும் சொல்ல முடியாது. நாம் ஏன் தோற்றோம் என்பதை நாம் நம்மிடம் கூட கேட்க தயாரில்லை. எனது புது வரவுகளே இடைவிடாது பெருமானாரின் சொல்படி செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.அச்சம் வேண்டாம்.வெல்வது உறுதி.
Wednesday, June 1, 2016 at 16:09 pm by s raja k.s
ஸ்வாமி  இராஜேந்திரன்
திருமந்திரம் சைவ நூல் என்று திருமூலர் சொல்லவில்லை. நன்றி.
Thursday, June 2, 2016 at 03:48 am by ஸ்வாமி இராஜேந்திரன்
venkatachalapathi baskar
நரை திரை மூப்பு பிரச்சனை அல்ல. இவற்றை நாம் எவ்வாறு பெருமானின் அருளால் களையப்போகிறோம் என்பதே பிரச்சனை. பெரியவர்களோ சிறியவர்களோ சன்மார்க்க கருத்துக்களை அவரவர்களுக்குப் பட்டதே சரி என்ற அளவிலேயே இன்னும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பெருமானனின் உண்மையான கருத்துக்களை திருவருட்பா துணை கொண்டு புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் திரு.மு. பா ஐயா அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதில் ஐயமிலலை.
திரு மு. பா ஐயா அவர்களுக்கு வள்ளல் பெருமானின் அருளால் ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒரு சிலவற்றையாவது நாம் பெற்றாலே அதுவே நமக்கு பாக்கியம்.
Friday, June 3, 2016 at 05:43 am by venkatachalapathi baskar