SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
நமக்கு என்ன தேவை என்று இறைவன் அறிவான்
  1. நமக்கு என்ன வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியாதா?
    ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் இடத்திற்கு வெகு தூரம் நடந்துதான் போகவேண்டும்.போகும் வழியில் ஒரு காளியம்மன் கோயில் இருந்தது. அவன் தினமும் அந்த அம்மனைக் கும்பிட்டுவிட்டு நான் இன்னும் எவ்வளவு நாள் இவ்வாறு கஷ்டப்படுவது. நீ கண் திறந்து பார்க்கமாட்டாயா என்று வேண்டுவான். ஒருநாள் காளி அம்மன் அவனைக் கூப்பிட்டு உன் பக்கத்தில் புதையல் இருக்கிறது. உனக்கு வேண்டிய அளவு மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அதிலேயே வைத்துவிட்டுச் செல் என்றாள்.அவன் பக்கத்தில் இருந்த அந்தப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தான். அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எல்லாம் தங்கக் காசுகள். அவனால் ஆசையை அடக்கமுடியவில்லை.உனக்கு வேண்டிய அளவு எடுத்துக்கொள் என்று அம்பாள் சொன்னாள்.எனக்கென்று ஓர் அளவா இருக்கின்றது? எல்லாம்தான் எனக்கு வேண்டும். இருந்தாலும் அம்பாளின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மூன்று தங்கக் காசுகள் மட்டும் விட்டுவிட்டு மற்றுமுள்ள எல்லாக் காசுகளையும் ஒரு மூட்டையாய்க் கட்டி எடுத்துக்கொண்டு தான் வேலை செய்யும் இடத்திற்குப் போனான்.அங்கு எல்லோரும் இது என்ன மூட்டை என்று கேட்டார்கள்.இது துவரம்பருப்பு மூட்டை என்று சொன்னான். அதை அங்கேயே வைத்துவிட்டு வேலை செய்யப் போய்விட்டான். அங்கே வேலை செய்யும் அனைவருக்கும் ஓர் அம்மாள் சாதம் சமைத்துப் போடுவாள். அன்றையதினம் அவளிடம் துவரம்பருப்பு தீர்ந்து போய்விட்டிருந்தது, கடைக்குப் போய்த் துவரம்பருப்பு வாங்கிவந்து சமையல் செய்ய நேரம் ஆகிவிடும்.துவரம்பருப்பு மூட்டைதான் அங்கே இருக்கின்றதே அதிலிருந்து நமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சாயந்திரம் அவன் போவதற்குள் வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த மூட்டையை அவள் எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்தாள்.எல்லாம் தங்கக் காசுகள் .அந்தக் காசுகளை எல்லாம் அவள் எடுத்துக்கொண்டு துவரம்பருப்பு வாங்கி அந்த மூட்டையில் வைத்து அவன் வைத்த இடத்திலேயே வைத்துவிட்டால். மாலையில் அவன் வந்து மூட்டையைப் பார்த்தான், உண்மையிலேயே துவரம் பருப்புதான் இருந்தது. தான் வைத்தது தங்கக் காசுகள் என்று சொல்லமுடியாமல் காளி கோயிலுக்கு வந்தான்.காளி சிரித்தாள்.உனக்குத் தேவையான மூன்று காசுகளை என்னிடம் பத்திரமாக வைத்துவிட்டுப் போனாயே அதையே எடுத்துக்கொள் என்றாள்.வேறு வழி இல்லாமல் அந்த மூன்று காசுகளை எடுத்துக் கொண்டு போனான்.
venkatesan naidu
very interesting
Wednesday, August 26, 2015 at 15:56 pm by venkatesan naidu