கவிஞர். கங்கைமணிமாறன்
மாபெரும் பேச்சுப் போட்டி
எம் வள்ளலார் அறக்கட்டளையின்ஆறாம் ஆண்டு அறிவுத் திருவிழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிற்பகல் மட்டுமே 600 பேருக்குமேல் அறுசுவை உணவுண்டு மகிழ்ந்தனர்.சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் இருந்து வருகை புரிந்த அன்பாளர் அய்யா தொண்டர் குல திலகம் மு.பாலகிருஷ்ணன் அவர்கள் நெகிழ்ந்து மகிழ்ந்து பாராட்டினார்கள்.ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் இத்தனை சிறப்பான, மக்கள் ஆதரவு பெற்ற விழாவா என்று வியந்து வாழ்த்திப் பூரித்தார்கள்.
அவர் போன்ற பற்பல சன்மார்க்கப் பெரியோர்களின் வாழ்த்தில் கிடைத்த உத்வேகத்தில் எம் அடுத்த நகர்வு அடுத்த மாதம் மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டியாக மலர இருக்கிறது.
  அப்துல்கலாம் பிறந்த "இளைஞர் எழுச்சி நாளை "முன்னிட்டு மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் அப் போட்டியை நடத்த உத்தேசித்துள்ளேன்.
   மாணவர்களின் எழுச்சி மிகுந்த சிந்தனை வள்ளல் பெருமான் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை உச்சபட்ச இலக்காகக் கொண்டு  செயல்பட்டு வரும் எளியேனின் இம் முயற்சிக்கு அன்பர்கள் உதவ வேண்டும் என்று அன்போடு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
  முதல் பரிசு ரூ 5000, 2.ஆம் பரிசு ரூ.3000, 3 ஆம் பரிசு ரூ.2000 ,மேலும் ஐந்து ஆறுதல் பரிசுகள் ரூ.1000 வீதம் வழங்கி மாணவர்களை உற்சாகப் படுத்த வேண்டும்  என்பதே எம் பேராசை.
  தலைப்புகள் :1. வள்ளுவரும் வள்ளலாரும்
                           2.ராமானுஜரும் வள்ளலாரும்
                           3.வள்ளலாரும் அப்துல் கலாமும் 
                           4.வள்ளலாரும் பாரதியாரும்  ....என்பதாகத் தலைப்புகளை உறுதி செய்துள்ளேன்.
பரிசுத் தொகையை வள்ளலார் அன்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் பணிந்து விண்ணப்பித்துக்
கொள்கிறேன்.போட்டி நாள் விவரம் விரைவில்.
தொடர்புக்கு : 9443408824 
EMAIL :rgangaimanimaran@gmail.com