கவிஞர். கங்கைமணிமாறன்
எச்சரிக்கிறார் வள்ளல்பெருமான்...!
கலப்படம் எல்லாக் காலத்திலும் இருந்தது..
இருக்கிறது.
ஒன்றில் ஒன்று மறையும்படியாக ,
கரையும் படியாக ,
அல்லது
ஒன்றேபோல் தோன்றி ஏமாற்றும்படியாக
அமைவதே..கலப்படம்.
தீமை வராமல் கலப்பது ஒருவகை.
கெடுதி வந்தாலும் நமக்கென்ன...என்று
கேடுடைய மதியோடு
கண்டதையும் கலக்கும் கயமை ஒருவகை.
இத்தகு சிறுமதி படைத்த வணிகர்கள்
தான்பெற்ற பேறழிந்து
கண்ணீர் வடிக்க நேரிடும் என்று
எச்சரிக்கிறார் வள்ளல்பெருமான்.
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ..
என்ற புலம்பல்
அவர்கள்  கவனத்தில் கொள்ளத்தக்கது.