கவிஞர். கங்கைமணிமாறன்
மகப்பேறழிக்கும் பாவம்...!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ..என்று
மன்னன் புலம்பலைப் புதிய கோணத்தில் பதிவு செய்கிறார் பெருமான்.
மாபெரும் பாவங்கள் பலவற்றைப் பட்டியலிடும் அவர், கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவை அழிப்பது மகப்பேறழிக்கும் பாவம் என்கிறார். நின்றால் மரம். விழுந்தால் விறகு. எரிந்தால் கரி. புதைந்தால் வைரம் என்று வரலாறு படைக்கும் மரங்களை அழிப்பது மாபாவம் என்னும் அவர் கருத்தில் விஞ்ஞானம் வெளிச்சமிடுகிறது.அறம் வளர்ப்போம் -மரம் வளர்ப்போம் என்னும் முழக்கத்துடன் களமிறங்கிய எம் அறக்கட்டளை இதுவரை  6000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளது.இவ்வாண்டும் வழங்கவுள்ளது.மகாகனி,வேங்கை,குமிழ்தேக்கு,மலைவேம்பு,ரோஸ்உட் போன்ற டிம்பர் வேல்யு உள்ள மரக்கன்றுகள் வழங்கிவரும் எம் அறக் கட்டளையின் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்ட அன்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.நன்றி.