Srilanka Gnana Sabai Temple
இலங்கையில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொடியை உயர்த்திப் பிடித்த சன்மார்க்க சீலர் திரு கேதீஸ்வரன்.
       சுவிட்சர்லாந்தில் (சூரிச் நகரில்) வாழ்ந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அன்பர் திரு கேதீஸ்வரனாலும், அவரது மனைவியார் திருமதி விஜயலக்‌ஷ்மி அம்மையார் அவர்களாலும், கிட்டத்தட்ட 6 கோடி மதிப்பில் (அன்றைய மதிப்பு) இலங்கைத் தீவில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில், சொந்தமாக இடம் வாங்கி, தமது சொந்தச் செலவில், இவையிரண்டும் கட்டப்பட்டன.

       திருநிலைக் கண்ணாடியினை, 2010ஆம் ஆண்டில், மேட்டுக் குப்பத்தில், திருச்சி அன்பர் திரு ஷண்முகம் அவர்களது வீட்டின் மாடியில், ஒரு மண்டலம் திரு அருட்பா முற்றோதல் செய்து, பூஜை செய்து, அதன் பின்னர், வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் அதனை ஒரு திறந்த வேன் மூலம் சன்மார்க்க அன்பர்கள் புடைசூழக் கொண்டு சென்று, அனைத்து இடங்களிலும் வழிபாடியற்றி அதன் பின்னர், திருச்சி திரு லக்‌ஷ்மணன் ஐயா அவர்கள் மூலம், விமானத்தில், அந்த திருநிலைக் கண்ணாடி, இலங்கைக்குக் கொண்டு செல்லப்பெற்றது. இலங்கையில், திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய முக்கியமான ஆன்மீகத் தலங்களுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்னரே, சத்திய ஞானக் கோட்டத்திற்குக் கொண்டு சென்று, அங்கும் வழிபாடியற்றிப் பின்னர், உரிய இடத்தில் அதனைப் பொருத்தி, அருட்பெருஞ்ஜோதி தீப தரிசனம் காண்பிக்கப்பட்டது. முதலில், தருமச்சாலையில் ஜீவகாருண்யப் பணிகளைத் துவக்கி, அதன்பின்னர், சத்திய ஞான சபையினைத் திறப்பு விழா செய்தார் உலகின் பல நாடுகளிலுமிருந்தும் அன்பர்கள், 2010ஆம் ஆண்டில், அங்கு குவிந்தனர். சுவிட்சர்லாந்தில் தாம் பார்த்த வேலையினை ஒரு கால கட்டத்தில் நிறைவு செய்துவிட்டு,தன் மனைவியுடன், வள்ளற் பெருமான் வகுத்த வழியில், தனியொரு மனிதராக, இலங்கைத் தீவில், இவ்விதமாக.... சுத்த சன்மார்க்கக் கொடியினை..திரு கேதீஸ்வரன் ஏந்திப் பிடித்துள்ளார்.. மாதா மாதம் மாதப் பூச நாள் விழா, வருடா வருடம்  தைப் பூச நாள் விழா முதலானவற்றைக் கொண்டாடி, அப்பகுதி வாழ் மக்களுக்கு, சுத்த சன்மார்க்க நெறியினை அவர் போதித்து வருகின்றார். இவரது வழிபாட்டு முறைகளைக் கண்ட இலங்கையைச் சேர்ந்த.. கனடாவில் வசிக்கும் அன்பர் ஒருவர், நல்லூரில், ஒரு குடில் அமைத்து, ஞாயிற்றுக் கிழமை தோறும், அங்கு, திரு கேதீஸ்வரன் மூலம், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை அங்கு வசிக்கும் அன்பர்கள் அறிந்து கொள்ளச் செய்துள்ளார். அவர், வரும் 19.8.2017 முதல் 3.9.2017 வரையில், சுத்த சன்மார்க்க விழா ஏற்பாடு செய்துள்ளார். உலகளாவிய அளவில், சன்மார்க்க அன்பர்கள், தமது சுற்றம் சூழ வருகை தந்து இலங்கை வாழ் மக்கள் மனத்தில், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைப் பதிய வைக்க வேண்டும் என அவர் விரும்புகின்றார். அவர் தயாரித்த விழாப் பத்திரிக்கை, இந்த இணைய தளத்தில், ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது. செல்லும் அன்பர்களுக்கு, தங்குமிடம், உணவு, இலவசமாக அவர் ஏற்பாடு செய்துள்ளார். எனவே, அவரது கோரிக்கையினை ஏற்று, எல்லா நாடுகளிலுமிருந்தும், சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.

     தனியொரு மனிதனாக, இலங்கைத் தீவில் அவர் ஏற்றிய சுத்த சன்மார்க்க அருட்பெருஞ்ஜோதி....தொடர்ந்து சுடர் விட்டு வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் போதிக்கும் ஞான விளக்காக மாற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திப்போம்.
New Doc 2017-07-13 (2)_1.jpg

New Doc 2017-07-13 (2)_1.jpg

image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg

image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg

20140115_074557-1.jpg

20140115_074557-1.jpg