Srilanka Gnana Sabai Temple
இலங்கை சாவகச்சேரியில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், 2017 ஜூன் மாதத்தில் சன்மார்க்க விழா.
     இலங்கை அளவெட்டியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜயலக்‌ஷ்மி ஆகியோர், பெரும்பொருட் செலவில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை (வடக்கு) என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி, அங்கு, சத்திய ஞான கோட்டத்தினை கடந்த 2006ஆம் ஆண்டில் கட்டி முடித்தனர். உள்நாட்டில் நிலவிய சில சூழ்நிலை காரணமாக அப்போது திறப்பு விழா செய்ய இயலாதிருந்தது. பின்னர், உள் நாட்டில் சுமுகமான சூழ்நிலை துவங்கியதும், 2010ஆம் ஆண்டில், சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் ஆகியவற்றைத் திறப்பு விழா செய்து, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை, இலங்கையிலும் பரப்பி வருகின்றனர்.

    7 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சத்திய ஞான கோட்டத்தினை, புணருத்தாரணம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். அப்பணி முடிவடைந்து, வரும் 2017 ஜூன் மாதத்தில் சன்மார்க்க பெரு விழா கொண்டாட அவர்கள் தீர்மானித்துள்ளனர். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  அவ்விழாவில் இந்தியாவிலிருந்து பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் வருகை தரலாம். 

தேவையான ஆவணங்கள்.

1. பாஸ்போர்ட்
2. விசா.
3. விமான டிக்கட்.
4. கைச் செலவுக்குப் பணம்.

    இலங்கை கொழும்புவிற்கு (தமிழ்நாட்டில்) கீழ்க்காணும்  விமான நிலையங்களிலிருந்து, விமானங்கள் நேரடியாகச் செல்கின்றன.

1. திருச்சி.
2. மதுரை
3. சென்னை

கொழும்பு சென்றடைந்தால், சாவகச்சேரிக்கு, நேரடி ரயில் சேவை கடந்த 3 ஆண்டுகளாக..துவங்கி செயல்பட்டு வருகின்றது. சத்திய ஞான கோட்டம் அமைந்துள்ள இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அன்பர்கள், இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்டு, அருள் நலம் பெறும்படி, திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
20140125_163017.jpg

20140125_163017.jpg

20140114_080858.jpg

20140114_080858.jpg