Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பற்றற்றிரு...இன்புற்றிரு...சுவாமி சரவணானந்தா.
     கடவுள், அருள் வண்ண, ஐந்தொழில் வல்ல பரம்பொருளாகும். அவ்வருட்பெருஞ் சக்தி அருவாய் அகத்திலிருந்து ஆள்கின்றது. புறத்தே உருவத் தோற்றங்கள் கொண்டு விளங்குகின்றது. அகத்திருக்கும் கடவுட் சக்தி எல்லாம் வல்லதாய், அருளால் எங்கும் தானாய் என்றும் விளங்கிக் கொண்டிருக்கப் பழைய உருவத் தோற்றங்கள் கழியவும், அடுத்து மற்றொன்று வந்து சூழவும் உள்ளதாம்.

     உண்மையில் ஒன்றான கடவுள் தானே நமது உயிராய், உணர்வாய், உட்லாய், உலகாய், மலர்வதும், குவிவதுமாய் உள்ளதென்று தெளிவுறுகின்றோம். இதனால் நாம் என்பது அந்த ஒன்றாம் பரம்பொருள் அல்லாது பிறிது எதுவும் அல்லவாம். ஆனால், சாதாரணமாக இந்த உண்மை விளங்குகின்றதில்லை. ஜீவ தேகப் பொறி புலன் பற்றால் இத்தேகத்தையும், போகப் பொருட்களையும், யான், எனது என்று கொண்டு வாழ்கின்றோம். இப்பற்றிலிருந்து அவா, வெகுளி, மயக்கம் முதலியன தோன்றி வாழ்க்கையில் பொய்யான இன்ப துன்பங்களை வளர்க்கின்றன. இவை ஒழிந்து மெய்யின்ப வாவு தோன்ற உண்ணின்று அறிவு மலர்கின்றது.

    கடவுள் தம் திருவருளால் உலகை ஆளுகின்றதால் அந்தக் கடவுளல்லாது நாம் என்ற ஒன்று உண்மையில் இல்லாததால், அவர்தம் அருளே நாமாகவும் விளங்க வேண்டியுள்ளது. இவ்வருள் வெளிப்படுகின்றபோது, அவா, வெகுளி, மயக்கம் முற்றிலும் ஒழிந்து போக வேண்டியுள்ளன. சுத்த அன்பினாலே இத்தீக்குணங்களை முற்றிலும் நீக்கிக் கொள்வதுதான் “நாம் அவராக ஆவது”

     எல்லாம் வல்லான்... நாமெல்லாம் ஆனான்.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png