Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தாமரை நாம் அரை...சுவாமி சரவணானந்தா .. திண்டுக்கல்.
சுத்த சன்மார்க்க விளக்க விரிவுரைகள் என்ற சிறு நூலில் மேற்காணும் தலைப்பில், சுவாமி சரவணானந்தா அவர்கள் வழங்கியது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அகண்ட பிரபஞ்சம் எல்லையற்றது. அப்பிரபஞ்சம் முழுமைக்கும் உரியது பரம்பொருள். அப்பரம் பொருளைக் ‘கடவுள்’ என்றனர். பலரும் பலவாறு பலவகையான பெயர்களால் குறித்தனர். அருட்பிரகாச வள்ளல் பெருமான் இறைவனை “அருட்பெருஞ்ஜோதி’ என்று குறிப்பிட்டார். அருட்பெருஞ்ஜோதி இல்லாத இடமோ, காலமோ இல்லை. அப்படிப்பட்ட பரம்பொருளை மனிதன் மட்டுமே கண்டு கொள்ளமுடியும். வள்ளல் பெருமான் இறையுண்மையை, ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக’க் கண்டு வெளியிட்டார். அப்படி வெளியிடுவதற்கும் திருவருளே காரணமாக அமைந்துள்ளது அகண்ட வெளி முற்றும் அகண்ட வடிவில் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டுள்ள இறையுண்மை அனுபவத்தின் பொருட்டு சுருங்கி சுடர் வடிவில் நம் தலை நடு இடஹ்ட்தே உச்சிக்குக் கீழே உள் நாவுக்கு மேலே விளங்குகிறது. எல்லா உயிர்களிலும் கடவுள் உண்மை விளங்கினாலும், மனிதனுக்குத்தான் பக்குவ தேகவும், உயிர் உணர்வும், அறிவு ஆற்றலும் வழங்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் எங்கும் நிறை இவ் இறையுண்மையை ஓம் என்றனர். அனாதி நித்திய பரம்பொருள் அன்றும், இன்றும், என்றும் விளங்கிக் கொண்டுள்ளது. ‘ஓம்’ என்ற சொல் ம், உ, அ என அகமிருந்து விரிந்து விளங்குகின்றது.ம் என்பது இகர ஒலியாக அடங்கி, உ என்பது உகர ஒலியாக உந்தப்பட்டு, அ என எங்கும் நிரம்பி விளங்குகின்றஹு. புறத்தேயிருந்து கான அ, உ, ம் என்ற மூவொலியாக விளங்குகின்றது.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg