Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.39க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
வாரா விருந்தாய் வள்ள லிவர் வந்தார் மெளன மொடுநின்றார்
நீரார் எங்கே இருப்பதென்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார்
ஊரா வைத்தது எதுவென்றேன் ஒண்கை ஓடென் இடத்தினில் வைத்(து)
ஏரார் கரத்தால் சுட்டுகின்றார் இதுதான் சேடி என்னேடீ.                              (இங்கிதமாலை)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     கடவுளேதான், காண்பரியராய் என்றும் இருந்து கொண்டுள்ளவர். அவரே ஒரு பிச்சைக் கோலத்துடன் இன்று புதிதாகத் தோன்றி மெளனமாக நிற்கின்றார் இந்த ஆன்மாவின் முன். இவள் கேட்கிறாள். “நீர் ஆர் எங்கே இருப்பது” என்று, அதற்கு அவர் ‘நீர் ஆர் - நீர் யார்’, எங்கே இருப்பது எனத் தன்னை விசாரித்ததாகக் கொள்ளாது, தன் உடைய (கங்கை) நீர் ஆகிய ஆறு எங்கே இருப்பது எனக் கேட்டதாகக் கொண்டு, அவரது பரந்த சடை முடியைச் சுட்டிக் காட்டினார். உண்மையில் அவர், அலகில் ஜோதியனாக எங்கும் நிறைந்து இருப்பவர், கங்கைப் பேராறாக நிலமெங்கும் பரவி இருப்பவர். இதனையே அவர் தம் நீண்ட சடை முடியாக, வான் வெளி நிறைந்த ஒளி நிலையையே ஆகச் சுட்டிக் காட்டுகிறார். இது புறப் பெருநிலை ஆகும்.

     ஆனால் நிறை பெருநிலையில், அவரை முழுமையாகக் காணவும், கூடி அனுபவிக்கவும் முடியாது; ஆதலின், ஒரு குறிப்பிட்ட இடத்தில், வடிவில் இருப்பதைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று, விண்ணப்பித்துக் கொள்ளுகின்றாள். இந்த ஆன்மா, இதைத்தான், :ஊரா வைத்தது எது: என்று கேட்கப்படுகிறது, ஊரா என்றால் ஊராக, குறிப்பிட்ட ஒரு தலத்தே, ஒரு படியாக இசைக்கப்பட்டுள்ளது எது என வினவப்படுகிறது. இதற்கு மறுமொழியாக, அவரது கையிலிருந்த திருவோட்டை நிலமேல் வைத்து விட்டு, விலகி நின்று, தன் கையால் அதனைச் சுட்டுகிறார். அவர் தம் உண்மையை ம்ழுமையாக, இந்நிலவுலகில் வெளிப்படுத்தி அடையாளமாக ஒற்றி வைத்துள்ள இடமே, திருவொற்றியாம், சிரநடுத்தலத்தலமே, அது திருவோட்டைப் போன்ற பகர வடிவ இடமேயாம். ஏரார் கரத்தால் “இதோ காண், கண்டு கொள்” என்று அக அனுபவமாகிய கரத்தினால் சுட்டிக் காட்டுகின்றார்.

        அகண்ட பெருஞ்ஜோதியாய் உள்ள கடவுள், இந்த நம் ஆன்ம நிலையமாகிய திருவொற்றியில்தான் பூரண இயல்பொடு எழுந்தருளிப் பிச்சாடன மூர்த்தியாய்த் திகழ்கின்றார். இங்கு இவரைக் கண்டடைந்து நமது ஆன்ம அன்னத்தை அவரது கரங்கொடுத்து விட்டால், கரபாத்திரமாகிய திருவோட்டில் சேர்த்து விட்டால் அங்கிருந்து, அவரது நிறை இன்பை அனுபவித்துக் கொண்டு வாழலாம்.
IMG_20171005_062911.jpg

IMG_20171005_062911.jpg

Thangaraj Aru
திருவொற்றியூர் உறையும் சிவனின் சிறப்பை இப்பாடலில் வள்ளலார் கூறியதை சுவாமிகள் தெளிவு படுத்தி நம் ஆத்மா கரையேறுவதற்கு உண்டான வழியையும் கூறுகிறார் நன்றி
Saturday, August 18, 2018 at 06:42 am by Thangaraj Aru