Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா..இங்கித மாலை..பாடல் எண்.5..உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
இங்கித மாலை பாடல் எண்.5.. திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றியது.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

மன்றல் மணக்கும் ஒற்றிநகர் வாணர் ஆகும் இவர் தமை நான்
நின்று அன் போடு கைஏந்(து) அனத்தை ஏற்று ஓர் கலத்திற் கொளுமென்றேன்
நன்று அன்புடையாய் எண்கலத்தில் நாம் கொண் டிடுவோம் என்று சொலி
என்றன் முலையைத் தொடுகின்றார் இதுதான் சேடி என்னேடீ.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0==

உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

==-==-==-==-==-==-==-==-==-==-==-

     நம் திருவொற்றி ஆகிய ஆன்ம வடிவுக்கு பக்குவ காலத்தே மன்றல் மணம், கற்பூர வாசம் வீசும் இயற்கைத் திருமணம் உண்டாகுமாம். அந்தத் திருவொற்றி வாழ்நர் (வாணர்) தான். நம் பிச்சை எடுக்கும் பெருமான். அன்போடு திருமுன் நின்று நம்மிடமுள்ள ஆன்மாவாம் அன்னத்தை ஒருகலத்தில் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவோம். உலக வாழ்வில் கைத்திடாது, வெறுப்புக் கொள்ளாது, அன்பு ஒழுக்கம் பூண்டு, ஆண்டவர் சந்நிதியில் ஆன்மார்ப்பணம் செய்தால்தான் அவர் அருள் பாலிப்பார். இந்த ஆன்மாவை ஒரு கலத்தில் அடைக்கலமாகக் கொள்ளும்படி வேண்டினாலே, திருவடியில் ஐக்கியப்படுத்தி பிறவா நிலையில் கிடக்கச் செய்து விடாமல், ஆகாசவெளி எல்லாம் நிரம்பி அனக வாழ்வுடன் விளங்கச் செய்யவே எண்கலத்தில் எட்டாகிய அகரப் பெரு வெளியிற் கொள்ளுவார் என்பது கருத்து..

   இடுக்கில்லாமலிருக்க இடமுண்டு நடஞ்செய்ய
   இங்குஅம் பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு

வடலூர்ப் பெருவெளியில் தானே மூவாமுத்தி இன்ப வாழ்வு வழங்கப்படுகின்றது.

   இந்த உண்மையினை உரைத்து, நம் இதயத்திருக்கும் ஜீவான்மாவாம் மார்பகத்தை (முலையைத்) தீண்டியுள்ளார் இன்று. நமக்கு அழியா வாழ்வு அருளவே நம் மனம் கவர்ந்தும், தனம் கவர்ந்தும், தன் நிலைக்கே உயர்த்தி விடுகின்றார்..
20141224_145443.jpg

20141224_145443.jpg

Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Great vadalur Vallalar picture has been evakarunyam made in the last time from 1823-1874 now 1874-2017 most of us debate his image disappearance date and time investigation never ever will end but anbu Karunai Dhayavu Jevakarunyam uniting the hearts of all in fact we have to equate Vallalar with global ashiest accepted Buddha to Bab Bahaullah of Baha’i Faith 1844 from Iran very close Vallalar surfaced 1823-1874 we all inspired by adighalar s pachippini will be vanished but those who get this free food must devote their energies to follow vadalurars vazhi
Monday, November 20, 2017 at 11:13 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R