Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கிதமாலை பதிகத்துக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருள் உரை.
இங்கித மாலை பாடல்.எண்.4ம் அதற்கான உரை விளக்கமும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000

மடையில் கயல்பாய் ஒற்றிநகர் வள்ளல் ஆகும் இவர் தமை நான்
அடையில் கனிவால் பணியென்றே அருள்வீர் உரிஈர் உடை என்றேன்
கடையில் படுமோர் பணியென்றே கருதி உரைத்தே என்றுரைத்தென்
இடையில் கலையை உரிகின்றார் இதுதான் சேடி என்னேடி.

திருவருட்பிரகாச வள்ளலார்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000

உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.

     இந்த மனிதப் பிறப்பில், வாழ்க்கை வெள்ளம், உள்ளத்தில் சதா பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கின்றது. உறு பக்குவமாகிய கயல் மீன் வரும் வரையும், ஒற்றி வள்ளலாகிய வெண் கொக்கு செயலற்றிருப்பதாகத் தோற்றுகிறது. கனிவால் பக்குவம் அடைந்த ஆன்மா, திருமுன் சென்று, “ஈர் உரி (இரண்டு தோல், புலித்தோல், யானைத்தோல்) கோபத்தையும், அகங்காரத்தையும் அழித்துச் சாந்தமும், தயவும் அணிந்து விளங்கும் அவரிடம், என்று நும்மைப் பணிந்திட அருள்வீர்” என்று கேட்கிறாள். அதற்கு அவர், இவள் வேண்டுவது, முடிவில் அடைய வேண்டிய, தன்னோடு ஐக்கியமுறும் பணிந்தின்புறும் நிலையே எனக் கருதித் தனக்கும் இவ் ஆன்மாவுக்கும் இடையில், இல்லாதே இருக்கும் மாயைத் திரையாம் கலையை நீக்குகின்றார்.

   எங்கும் நிறைந்துள்ளவர் கடவுள்; அப்படி இருக்கும் அவரை, அபக்குவி எங்கேயும் காணமுடிகின்றதில்லை. தனக்கும், கடவுளுக்கும் இடையே ஏதோ அழுத்தமான திரை மறைப்பு இருப்பதாக எண்ணித் திருச்சந்நிதியில் கனிந்து உருகி வேண்டுகின்றார்ன்.  இவனுக்கும் சாந்தமும் தயவும் உண்டானபோது, அறியாமைத் திரையொழிகின்றது. இதுதான் ‘இடையிற்கலையை உரிகின்றார்’ எனப்பட்டது. அப்போது கடவுளை எங்கும் கண்டு பணிந்து அன்பு இன்ப நிறைவு பெறப்படுகின்றது.


20150405_082857.jpg

20150405_082857.jpg