Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா தொகுப்பு....என்னும் நூலிலிருந்து...சுவாமி சரவணானந்தா.
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய்விழைந்துழல்வேன் புன்மையேன் புலைத்தொழிற் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

                                                                                         (ஆற்றாமை)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

எழுவினும் வலிய மனம் -- நெகிழ்ச்சியற்ற வன்மை மிக்க தூண் போன்ற கல் நெஞ்சு. ஓர் ஆன்மா, அபக்குவ நிலையில் எப்படி எல்லாமிருக்கும் என்பது இங்கு குறிக்கப்படுகின்றது. ஆன்மாக்களின் ஒருமை வகையால், தனது தற்போத ஒழிவின் பொருட்டு இப்படித் தன்னையே குறை கூறினாற் போல் புனைந்து கூறப்பட்டுள்ளது இதுபோல் பிற செய்யுட்களுக்கும் பொருள் கொள்ளலாகும்.
IMG_20160320_090309.jpg

IMG_20160320_090309.jpg