Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா தொகுப்பு....என்னும் நூலிலிருந்து...சுவாமி சரவணானந்தா.
ஒன்றும் அலார் இரண்டும் அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும் அலார் அருவும் அலார் உருஅருவும் ஆனார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
   ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்ஜோ தியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங் கிடுவார்
   யாவும் இலார் யாவும் உளார் யாவும் அலார் யாவும்
ஒன்றுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
   ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

                                      (திருச்சிற்றம்பல தெய்வமணி மாலை)

ஒப்பற்ற கடவுள் ஒருவரே அல்ல..இரண்டாகவும் இல்லை..இரண்டு படா ஒன்றான அத்துவிதமாயுள்ளார். தோன்றியும் தோன்றாது யாவுமாய் அம்பலத்திருந்து திகழ்கின்றார்.
20150520_154927.jpg

20150520_154927.jpg