Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா தொகுப்பு....என்னும் நூலிலிருந்து...சுவாமி சரவணானந்தா.
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தாரணியில் அருட்பெருஞ்ஜோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள் நின்னை
வைத்தாய் மணிமன்ற வாண நின் பேரருள் வாய்மையென்னே...

                                                     (பேரருள் வாய்மையை வியத்தல்)

==0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

கடவுள் ஆன்ம உண்மை, திருவருள் ஒருவனின் அகத்தே வெளிப்படுத்தும் போதுதான் எழுச்சி பெறுகின்றது. இதுவே செத்தார் எழும் நிலை. இதனால் உட்பெருகு அருட்ஜோதி, உயிருடம்பையும் அழியாதிலங்கச் செய்வதால் மரணமிலா வாழ்வு ஒருவர்க்கு ஏற்படுவதாம். மற்றபடி ஏகதேச சித்துச் செயலால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்தல் பெரிதல்ல. அப்படி எழுந்தவர் மறுபடி அழிவதுவே விதியாம். இக்கருத்தின்படி பிற இடத்தும் ‘இறந்தார் எழுதல்’ பற்றி அறிய வேண்டும்.
20140806_085753.jpg

20140806_085753.jpg