Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக்குறள் எண்.66 ஏழாம் அதிகாரம் பொது ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
சீவர்மூ வர்க்குந் தெளிவளித் திங்கென்றும்
ஓவலிற் கொள்க ஒழுக்கு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     ஓவல் - நீங்குதல், இல் - இல்லாத, அதாவது நீங்குதலில்லாத நித்திய ஒழுக்கம் மேற்கொண்டு மூவகை சீவர்கட்கும் இயன்ற அளவு அன்பு காட்டி இன்ப மூட்டல் வேண்டும்.

     சீவர் மூவர் என்றது, ஆன்மாவின் பக்குவ, பக்குவாபக்குவ, அபக்குவ வசத்தால் உயர்ந்ததாகும். ஒத்தாரும், தாழ்ந்தாருமாக வாழ்பவர்கள்.

     இவர்கள் யாவரும் மேல் நிலைக்கேற உதவுதல் திருவருட் சம்மதம்.
IMG_20160323_204428.jpg

IMG_20160323_204428.jpg