Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.65. ஏழாம் அதிகாரம் பொது ஒழுக்கம்...சுவாமி சரவணானந்தா.
இந்திரிய மைந்தின் எழுதரு பேரருள்
வந்திட வந்திடும் வாழ்வு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     அகத்தே தோற்றிடும் கடவுள் அருள் உணர்வு ஐம்பொறிவாயில் வழியாகக் காரியப்பட்டால், மனிதனுடைய வாழ்வு, நல்வாழ்வாக, நல்லின்ப வாழ்வாக விளங்கும்.

     எழுதரு பேரருள் என்றது, எழுகின்ற, உதிக்கின்ற, தோற்றுகின்ற பெருந்தயவு என்பதாம். அன்றியும், எழுத அரும், அதாவது, எழுதுதற்கு அரிய, எழுத முடியாத பேரருள் என்பதுமாம்.

     திருவருள் உண்மை, மனோ வாக்கிற்கு எட்டாத ஒன்றாதலின், சொல்லாலும், சொற்கொண்ட எழுத்தாலும் குறித்துக் காட்ட முடியாது என்பது தெளிவு.

IMG_20160320_090346.jpg

IMG_20160320_090346.jpg