Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.57. ஆறாம் அதிகாரம்..தெய்வ வழிபாடு..சுவாமி சரவணானந்தா.
மகத்தே குருசேர் மதிநிறை நாளே
அகத்தே அருட்குரு வாம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     புற வானிலே மக நட்சத்திரத்தில் வியாழனும் முழுமதியும் கூடித் தோன்றும் தினம் ஒரு புனித நாளாக, மகாமகம் எனக் கூறப்படுகின்றது.

     நமது அகத்தே ஒளிரும் பூரண ஞான அருட்குருவை உணர்த்தும் அது ஓர் அடையாளமாம். அக ஓர்மையில் மூழ்கி அருள் ஞான குருவின் தரிசனையால் ஆனந்தானுபவம் பெறல் வேண்டுமே அல்லாது, கும்பகோண மகாமகப் புறவழிபாட்டால் பெறும் பயன் சிறைப்புடையதன்றாம்.
20140713_221310.jpg

20140713_221310.jpg