Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள எண்.44...ஐந்தாம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
அறம்பாவ மென்னும் அடியிரண்டாற் றெய்வம்
புறத்தாடி நிற்கும் புரிந்து.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

உரை விளக்கம்.

     அகம் பழுக்கவே, புறத்தில் தெய்வ சக்தியானது, நல்வினை, தீவினை என்னும் இரு கூறாகி இயங்கிக் கொண்டே உள்ளது. ஆன்மாவின் புறத்தே இவ்விதி நடனம், இருவினை ஒப்பு வரும்வரை நட்ந்து கொண்டேதான் இருக்கும்.

     அருள் வந்து மல மறைப்பு நீங்கிய போது, பதி நிலைக் கண் நிற்கவும், அப்போது விதி நடனம் காலோய்ந்து ஒழியவும் காண்போம்.

     ஆன்ம பதியின் அருள் ஆனந்த் நடனம் கண்டு கொண்டார்க்கு, புறத்திலங்கும் தெய்வ விதி நடனம் பற்றுவதில்லை. பற்றாது புறத்தாடுவதாம்.


20150405_082857.jpg

20150405_082857.jpg