Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.39. நான்காம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
பிண்ட வுயிர்ப்பலவும் பேரண்டத் தெவ்வுலகும்
உண்டே சதாவலங்கொள் ஒன்று.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     உயிர்களும், உலகங்களும் என்றும் வலஞ்செய்து கொண்டே உள்ள ஒன்று நித்தியமாக நிலைத்துள்ளது. அந்த ஒன்று, பிண்ட உயிரில் ஆன்ம அணுவாய் நடுநிற்க உயிர்ச்சக்தி தோன்றி வலஞ் செய்யவும், பூத அணுவில் மூலக்கரு (Proton) நடுநிற்க காந்தச் சுழல் (Electron) வலஞ்சுற்றவும், ஞாயிற்றை நடுவைத்து கோட்கள் ( Planets) வலஞ் செய்யவும், எண்ணற்ற ஜோதி உடுக்கள் மாமேருவை வலங்கொள்ளவும் விளங்குகின்றதுவே அந்த ஒன்றாகிய கடவுள்.
IMG_20160317_143353.jpg

IMG_20160317_143353.jpg