Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.74. அதிகாரம் எண்.8. கண்ணிந்திரியவொழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.74.
எட்டாம் அதிகாரம்...கண்ணிந்திரிய வொழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

எண்ணு முணர்வில் இறையொளி யொன்றிய
கண்ணே பெறும் அருட்காண்பு.        (தயவுக் குறள் எண்.74)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     கடவுள் ஒளியாகிய தயவு உள்ளுணர்வில் மலர்ந்து விளங்கும்போது புறத்தே தோன்றுகின்ற காட்சியெல்லாம் தெய்வ அருட் காட்சியாகவே தோன்றும் (காண்பு = காட்சி).

     இங்கு எண்ணும் உணர்வு என்றது பொறி புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பகுத்தறியும் பக்குவ மனோ உணர்வாம். இதில் தயவு உண்டானால்தான் காண்பனவெல்லாம் தெய்வக் காட்சியாகத் தோன்றும். தயவில்லாத வெற்றுப் பகுத்தறிவால் உண்மை புலனாகாது.