Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண். 208. அதிகாரம் 21. மருட்கை. சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.208.
21ஆம் அதிகாரம்,
மருட்கை.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

நிறையருளாற் பெற்ற நிலையான வின்பம்
மறைமருளாற் காணா மகற்கு.         (தயவுக் குறள் எண்.208)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     அழியாத பேரின்பம், கடவுளின் பேரருள் ஒன்றினாலே கிடைக்கக் கூடியதாய் உள்ளது. ஆதலின், சுத்த தயா நன்முயற்சி செய்து அதனைப் பெற வேண்டும்.

     மற்றபடி மனித முயற்சியினால், தெளிவில்லாத வேதகம சாத்திர அறிவைக் கொண்டு மட்டும் கடவுளின்ப வாழ்வைப் பெறுவது என்பது முடியாது.

     மருளாகிய, மயங்கொளி உணர்வுதான் மறையால் பெறலாகும் என்பதும், அதுவும், நிலையற்று மறைந்து போகும் என்பதும், ‘மறைமருள்’ என்னும் சொற்களினால் குறிக்கப்படுகின்றன.
IMG_20160629_212056.jpg

IMG_20160629_212056.jpg