Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண். 580. அதிகாரம் எண்.58. விசார சங்கற்பம்.. சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.580.

ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.

விசார சங்கற்பம்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

விசாரப் பயனிதுகாண் வீவில் தயவாம்
நிசாலயத் தொன்று நிலை. (தயவுக் குறள் எண்.580)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

சுத்த தயாவொளி வீசிக் கொண்டு, நித்தியமாய் விளங்குகின்ற அம்பலத்தை அறிந்து அடைந்து, அதிலே நிலைத்து, இறப்பற்று வாழ்வதே இச்சத்விசார சங்கற்பத்தால் அடைகின்ற பயனாம். இந்நிலையின் கண்ணிருந்தே பேரின்ப வாழ்வு தொடர்வதாம். இதனால், முன் கூறப்பட்ட ஒழுக்க இயலும், இந்த விசார இயலும், மேல் வரும் இன்ப இயலுக்கு அடிநிலையாக அமைந்துள்ளன. எனவே, இனி தயா இன்ப வாழ்வு தழைப்பதாக.

IMG_20160629_212056.jpg

IMG_20160629_212056.jpg