Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண். 560. அதிகாரம் எண்.56. கடவுட் காட்சி. சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.560
56ஆம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

வள்ளலருட் ஜோதி மலர்ந்துலக மெல்லாமுங்
கொள்ளவரு காட்சியே கொள்.                       (தயவுக் குறள் எண்.560)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

      ஆன்மாவின் கண்ணின்று, அரும்பி மலர்ந்து தயவு உணர்வோடு விரிந்து, உலகெல்லாம் நிறைந்த பெருஞ் ஜோதிமயக் காட்சியே பெறுதல் வேண்டும். இக் காட்சி அனுபவமே, தனியொரு ஆன்மாவில், நம் தயா ஜோதி வள்ளல், வெளிப்படுத்திப் பேரின்ப நிலை வழங்குவதாகும்.

     ஆதலின் யாவரும் புற வித்தியாசங்களை எல்லாம் பற்றற விட்டு, அக விசாரத்திருந்து அருள் உணர்வு பெருகப் பெருக உலகியலில் வாழ்ந்து எல்லோரும் அகப்பெருஞ் ஜோதியைக் கண்டு ஆனந்தமுறக் கடவர்.
vlcsnap-2015-08-18-06h45m06s159.png

vlcsnap-2015-08-18-06h45m06s159.png

20140224_122354~2.jpg

20140224_122354~2.jpg