Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.670..(அதிகாரம் எண்.67) மருந்து...சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.670.
அதிகாரம் 67...மருந்து.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

சுத்ததய வாளர்காண் சோதி மருந்துலகில்
செத்தவரை மீட்டெழுப்புந் தேன்.                                 (தயவுக் குறள்.670)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

தயாசோதி மலரில் சுத்த தயா மருந்தாகிய தேன் நிரம்பியுள்ளது. இதனைச் சுத்த சன்மார்க்கத்தால், கண்டு கொண்டு உண்டு மகிழ்வோர்தான், ஆன்ம நிலையினின்று அனகமுற்றுப் பேரின்ப வாழ்வடைகின்றார்கள்.

சுத்த மார்க்கத்தால் அக விழிப்படைந்து, ஆன்மா ஆனந்த வாழ்வடைவதே செத்த நிலையிலிருந்து உயிர்த்து எழுவதாகும். ஆகையால், எல்லா மனிதர்களிலுள்ள ஆன்மாக்களும் செத்தே கிடக்கின்றனவாம்.

சுத்த தயவுத் தேனாகிய தயா சோதி மருந்து செத்துள்ள ஆன்மாக்களை எழுப்பவல்லதாம். இச்சுத்த சன்மார்க்க சித்தி பெறுபவர்களே உயிர்த்து எழுபவர்கள். அருட்பிறவி அல்லது ஞானப்பிறப்பு அடைந்தவர்கள்; இனி இறவாதவர்களும் ஆவர். இதுவல்லாது, நம் பதி மருந்து உட் கொண்டோர் சர்வ சித்தியும் பெறுவார்கள். ஆதலின், நோய் தவிர்த்தல், இறந்தாரை எழுப்புதல் முதலிய அற்புத சித்திகளையும் செய்ய வல்லவராவர்.

மேலும், இத்தயா சோதி மருந்து, தயவாகிய மந்திரமும், இயற்கை விளக்கமுடைய சோதி மணியும், ஆனந்த அமிர்தமாகிய மருந்தும் இணைந்த ஒன்று. ஒப்பும் உயர்வும் அற்ற அற்புத மருந்து இதுவாகும்.

vlcsnap-2015-09-19-21h16m15s1.png

vlcsnap-2015-09-19-21h16m15s1.png