Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
முக்கிய நாட்களின் தத்துவ விளக்கம் ஆடி அமாவாசையின் சிறப்பு ...சுவாமி சரவணானந்தா.
திருவாதவூரில் ஆடி அமாவாசையன்று சென்று கண்ட பொருள்:

     அங்குள்ள பெரிய கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஈசுவரன், திருமறை நாயகர் எனவும், அம்மை வேத நாயகி என்றும் கூறப்படுகின்றன.  ஏன் அப்படிக் கூறி வைத்துள்ளனர் என்று ஆழ்ந்து நோக்கும்போது, மறை,   அகநிலையனுபவம் வழங்கும் ஒன்றாயும், வேதம் உலகியல் விரிவுகாட்டி உய்ப்பதாகவும் உள்ளதாய்க் காண்கின்றோம். நான் என்ற ஆணவ அகங்காரத்தை ஒழிப்பது நான்மறை, வேதமாகிய வித்தினின்று விளைந்து சகோபசாகையாக விரிந்து, கர்ம காண்டம், ஞான காண்டம், உபதேச காண்டம் முதலியவற்றால், மனிதனின் புற வாழ்க்கையை சீர்படுத்த முயல்வதாகும். இவ்வேத நெறி மேலும் நமது ஜீவ தேகத்தில் இப்பூத உடல் கரணேந்திரிய உணர்வு எல்லாம் பெண்ணின் அம்சமாக உள்ளன. ஆன்மாவும், பிரகிருதியும் ஆண் தாதுவினின்று தோன்றி அக ஆகாசத்தே விளங்குகின்றதாம். இந்த உண்மைகளை விளக்கவே, தேவியை, வேத நாயகி என்றும், ஈசுவரனை திருமறை நாயகனென்றும் காட்டியுள்ளனர் எனத் தெளிந்து கொள்ளுகின்றோம்.

     இப்படித் திருமுறையுண்மை அறிய நேர்ந்த தினம் ஆடி அமாவாசையாக புறத்தே அமைந்தது. இந்நாள் அண்டவானில் சூரியன், சந்திரன் இணைந்து பூச உடுவில் உள்ளதாகும்.  இப்புற நிலைக் காட்சி அன்று தோன்றி அன்று மறைந்தது. ஆனால் இது, நமது அகவானில், பூசம் என்றும் காற்குளத்தே என்றும், மன்னியுள்ள நம் உண்மையையும் சூரியன் சந்திரனாகிய சுத்த ஞான (பொற்சபை, சிற்சபை) தேகசித்தி பொருந்தியுள்ளதையும் குறித்துக் காட்டிக் கொண்டுள்ளதாக அறியலாகின்றது.

     கலியுக முடிவில், சூரியன், சந்திரன், குரு இம்மூன்றும் பூசத்தில் ஒரு காலில் வரும் என்றனர். அப்படியே, சென்ற சுபானு, ஆண்டு ஆடி அமாவாசையில் வந்துற்றது. கலிமுடிந்து, சுத்த சன்மார்க்கம் தோன்றி, சதுர்யுகத்தும் அழியாத சுத்த பிரணவ ஞான தேக சித்தியை வழங்க அகநிலை உணர்த்தியுள்ளதாம். குரு சுட்ட வந்த பிரணவ தேகநிலை நமக்கு, அருள் அல்லது சுத்த தயா உணர்வாக உள்ளதால், இந்த ஆடி அமாவாசைப் பூசத்தில், தயா பிரணவ நிலையிலிருந்துதான் சுத்த ஞானம் சேர்ந்த உண்மையும் கண்டு கொண்டோம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=

சுவாமி சரவணானந்தா....முக்கிய நாட்களின் தத்துவ விளக்கம்..என்ற நூலிலிருந்து.
20140726_210119-1.jpg

20140726_210119-1.jpg

20140713_221310.jpg

20140713_221310.jpg