DAEIOU - தயவு
13.11.2017 மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்க அன்பர் திரு நந்தி சரவணன் அவர்கள் நடத்திய தர்மச்சாலை..
    மதுரையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு நந்தி சரவணன் அவர்கள், மேட்டுக்குப்பத்தில், தீஞ்சுவை நீரோடையை அடுத்து, சன்மார்க்க தர்மச்சாலையை பலவருடங்களாக நடத்தி, அங்கு வருவோர்க்கெல்லாம் உணவு படைத்து வருகின்றார். சுமார் 4 வருடங்களுக்கு முன்னர், நிரந்தரக் கட்டுமானம் செய்திருந்தார். அதனை ஒட்டி, உணவு தயாரிப்புக்கென்று, கூரை வேய்ந்த சமையலறையை நிறுவியிருந்தார். வரக்கூடிய அன்பர்கள் உணவருந்துவதற்கு ஏதுவாக, அருகருகே, நீளமான அளவில், கூரை வேய்ந்த ஒரு பகுதியில், அன்ன வினியோகம் செய்து கொண்டிருந்தார். மேட்டுக் குப்பத்தில், எந்த நேரத்தில், எத்தனை நபர்கள் வந்தாலும் சித்திவளாகத்திருமாளிகையில் தரிசனம் முடித்த கையோடு உணவ்ருந்தச் செல்லலாம் என்ற உறுதியான நிலைப்பாடு, அவர் நடத்திய தருமச்சாலையின் மூலம் நிறைவேறியது. 13.11.2017 திங்கள் அன்று அதிகாலையில், அந்தக் கூரை வேய்ந்த பகுதி முழுவதுமாக, எரிந்து விட்டதாக, செய்தி தெரிய வந்தது. அது உண்மைதானா என மேட்டுக் குப்பத்தில் உள்ள சன்மார்க்க அன்பர்களைக் கேட்டதில், அச்செய்தி உண்மைதான் எனவும் தெரியவந்தது.  அதற்கான காரணம் தெரியவில்லை.

இருப்பினும், மனம் தளராமல், தனது தருமச்சாலைப் பணியினை அன்பர் திரு நந்தி சரவணன் தொடர்ந்துள்ளார் என்ற செய்தியும் வரப்பெறுகின்றது. எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர் நடத்தும் அன்னதானப் பணியினைத் தொய்வின்றி நடத்தத் துணை செய்ய வேண்டும் என்ற வேண்டுகையினை அன்பர்கள் தெரிவிக்க வேண்டப்படுகின்றது.
20140224_150824~2.jpg

20140224_150824~2.jpg

Daeiou  Daeiou.
அன்பர் திரு நந்தி சரவணன், தன்னுடன் உள்ள சிப்பந்திகளின் உதவியுடன், தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து, மீண்டும், தனது தருமச்சாலையில், அன்னதானப் பணியினைத் தொடர்ந்துள்ளார். இன்று, 14.11.2017 காலையில் வழக்கம்போல, காலை ஆகாரம், வருவோருக்கெல்லாம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, மேட்டுக் குப்பத்திற்கு வருகை புரிவதாக முன் திட்டமிடப்பட்ட பள்ளிக் குழந்தைகள் குழாம் ஒன்றுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணியில் அவர், தாம் சார்ந்த ஊழியர்களுடன் ஈடுபட்டுள்ளார். தொடரட்டும் அவரது அன்னதான ஜீவகாருண்யப் பணி..வாழ்த்துக்கள்.
Monday, November 13, 2017 at 23:11 pm by Daeiou Daeiou.