DAEIOU - தயவு
26.3.2017 ஞாயிறு அன்று மாலை 7.00 மணிக்கு அமெரிக்கா மற்றும் உலகளாவிய பல நாடுகளில் வாழ் சன்மார்க்க அன்பர்கள் கேட்பதற்காக..ஏற்பாடு.
வரவிருக்கும் ஞாயிறு 26.3.2017 மாலை 7.00 மணி அளவில், மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு விஜயராமன், தொலைபேசி மூலம், சுத்த சன்மார்க்க சொற்பொழிவு நடத்தவுள்ளார். இதனை அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள எல்லா அன்பர்களும் கேட்கும் வகையில், அமெரிக்காவில் வாழும் அன்பர் திரு துரைப் பாண்டியன் அவர்கள் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அன்பர்கள் இதனைக் கேட்கும் வகையில் (Code No.) கோட்டு எண்.முதலானவற்றையும், அதனைப் பயன்படுத்தி, எவ்வாறு, இதனை இலவசமாக, எந்நாட்டினரும் கேட்கலாம் என்ற வகையிலான செய்தியையும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, 26.3.2017 அன்று, உங்களுக்காகக் காத்திருக்கின்றது...சுத்த சன்மார்க்க விரிவுரைச் சொற்பொழிவு...கேட்பதற்கு,..நீங்கள் தயார்தானே....


IMG_20170312_125855.jpg

IMG_20170312_125855.jpg

Durai Sathanan
மிக்க நன்றிகள் பல ஐயா. வளமோடு இன்புற்று வாழ்க! அருட்பெருஞ்ஜோதி...
Friday, March 24, 2017 at 02:32 am by Durai Sathanan