DAEIOU - தயவு
2.6.2015 சங்கரன்கோவில் வீரிருப்பு புத்தர் கோவில் புத்த பூர்ணிமா விழா அழைப்பிதழ்.
உலக அமைதிக்கான புத்தர் கோவில், சங்கரன்கோவிலிலிருந்து புளியங்குடி செல்லும் சாலையில் 5 கி.மீ.தொலைவில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதன் நிர்வாகி திரு இஸ்தானி அவர்கள், மற்றும் புத்த பிக்குணி செல்வி லீலாவதி, மற்றுமொரு புத்த பிக்குணி ஆகியோர், வரவிருக்கும் 2.6.2015 (செவ்வாய்க்கிழமை) அன்று, இந்தக் கோவிலில், புத்த பூர்ணிமா விழா பிரார்த்தனை செய்யவுள்ளனர். சர்வ சமய பிரார்த்தனை இங்கு நடைபெறவுள்ளது. அனைவரையும், அவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

Contact No.: (Buddhist) Selvi Leelavathi (91) 98421 97716.
20150507_055754.jpg

20150507_055754.jpg

20150521_190615.jpg

20150521_190615.jpg

20150521_190626.jpg

20150521_190626.jpg

20150505_082438.jpg

20150505_082438.jpg

20150505_082451.jpg

20150505_082451.jpg

20150505_083308.jpg

20150505_083308.jpg

4 Comments
TMR RAMALINGAM
நான் சென்ற மாதம் (ஏப்ரல்-2015) சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுவந்தேன். அப்படியே அருகிலுள்ள டார்ஜ்ஜிலிங் மலைவாசத்தலத்திற்கும் சென்றுவந்தேன். அங்கு பீஸ் பகோடா என்கின்ற ஜப்பானிய புத்த ஆலயத்திற்குச் சென்றேன். அவ்வாலத்தில் ஒரு தலைமை புத்தத் துறவி "நா-மு-மியோ-ஹோ-ரென்-கே-கியோ" என்ற மந்திர வாக்கியத்தைக் கூறிக்கொண்டே மேளம் வாசித்துக்கொண்டிருந்தார். நானும் அந்த பூசையில் அமர்ந்து மேளத்தை வாசித்துக்கொண்டே அந்த மந்திர வார்த்தையினை கூறினேன். இந்த மந்திரத்தைச் சொல்லி மகாத்மா காந்தியும் தனது ஆசிரமத்தில் வழிபட்டுள்ளார். இந்த ஜப்பான் மந்திரத்திற்கு பொருள் ஏதும் இல்லை. ஏனெனில் இது எந்த ஒரு மொழியும் சாராதது. இது மனதிற்கு ஊக்கமும் அமைதியையும் தருகின்ற ஒருவகை இராகம். பிரார்த்தனை செய்ய உதவும் ஒரு மந்திரத்திற்கு, எந்த ஒரு மொழியும் எந்த ஒரு பொருளும் தேவையில்லை" என்பது இம்மந்திரத்தை உருவாக்கிய ஜப்பானை சேர்ந்த புத்தத்துறவி நிப்பான்ஜன் மியோஹோஜி அவர்களின் தத்துவமாகும். இவர் மகாத்மா காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்கது. இதனைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள "எனது சிந்தனையில் சிக்கிம்" என்ற மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கலாம். நன்றி.

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqS25IQk5LVTRvU2c/view?usp=sharing
Sunday, May 24, 2015 at 08:07 am by TMR RAMALINGAM
Daeiou  Daeiou.
உலக அமைதிக்கான ஒரு இடமாகவே, இந்த புத்தர்கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட ஒரு புத்தர் கோவில் இதுவாகும். அமைதியான மனோபாவத்தில், தத்தம் கடவுளர்களை வணங்குவதை, இந்தப் புத்தர்கோவிலில் அனுமதிக்கின்றனர்.
Sunday, May 24, 2015 at 17:39 pm by Daeiou Daeiou.
ram govi
For people who cannot spend time in solitude and subtle meditation practices, Nam Myo Ho Renge Kyo is supposed to be the last mantra called Lotus Sutra rendered by Gautama to his disciples I have practiced for a while a decade ago, it gives peace of mind for sure. Students of this clause are working together to weed out grass root problems and practitioner had revealed it improving one's Self to next plane.
Tuesday, May 26, 2015 at 01:06 am by ram govi
Daeiou  Daeiou.
Buddha Poornima is going to be celebrated here in this Buddha Temple on 2.6.2015. Selvi Leelavathi is inviting all to attend this function.
Tuesday, May 26, 2015 at 14:22 pm by Daeiou Daeiou.