DAEIOU - தயவு
தவத்திரு முருகானந்த அடிகள் நிலை அடைந்த நாள். 4.3.1964.
      தவத்திரு முருகானந்த அடிகளின் பெற்றோர், திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் வாழ்ந்துள்ளனர். அவருக்கு பெற்றோர், சுப்பிரமணியன் எனப் பெயரிட்டனர். பின்னர், செல்லையா என அவர் அழைக்கப்பட்டுள்ளார். 24 வயதிலேயே அவர் ஞான வாழ்வில் நுழைந்து, பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தம்மை மேலேற்றிக் கொண்டார். பின்னர் அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேடு என்ற இடத்தில் 1952ஆம் ஆண்டில் வந்து அங்கேயே தொடர்ந்து வாழலானார். அங்கிருந்தவாறே, திரு அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளை, வருவோருக்கெல்லாம் போதித்து வந்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், வள்ளலார் சன்மார்க்க சங்கங்கள் 108 நிறுவியுள்ளார்.

     மருதூரில் உள்ள வள்ளலார் பிறந்த இல்லம் முதலில் இவரால் விலைக்கு வாங்கப்பட்டு, அங்கேயும் சங்கம் அமைத்து அதனை வழிபாட்டு நிலையமாக்கியுள்ளார்.

மேலும், குழந்தைகள் பயில்வதற்கு என ஒரு பள்ளி அமைக்க வேண்டுமென்று, அப்போதைய ஜெயங்கொண்டம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திரு கே.ஆர். விசுவநாதன் எம்.ஏ அவர்களிடம் தெரிவித்துள்ளார். அடிகளாரின் ஆசியுடன், திரு கே.ஆர்.விசுவநாதன் அவர்களின் பெரு முயற்சியால், இங்கு ஒரு பள்ளி, 17.10.1953ம் நாளில் துவங்கப்பட்டுள்ளது. முதலில் 10 குழந்தைகளுடன் துவங்கிய இப்பள்ளி, தற்போது, 275 ஆதரவற்ற குழந்தைகளுடன் நடைபெற்று வருகின்றது.

    தற்போது, அங்கு திரு பெ.செளந்தரராஜன் என்பவர், (19 ஆண்டுகளாக) இப்பள்ளியில், பணிபுரிந்து வருகின்றார்.

தவத்திரு முருகானந்த அடிகளாரின் காலம் 22.8.1911 முதல் 4.3.1964. ஒரு வகையில், வள்ளல் பெருமான் வகுத்த நெறியில் நின்ற தவத்திரு முருகானந்த அடிகளாரின் நினைவு நாளாக, இன்று (4.3.2015) வரப்பெறுகின்றது.

     வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை சொற்பொழிவு ஆற்றும்படி, அமெரிக்காவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு இராமலிங்கம், திண்டுக்கல் திரு வி.விசுவநாதன் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர், கடந்த மாதம் அதாவது 14.2.2015 அன்று அங்கு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவருடன் சேர்ந்து, அரியலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு குழந்தைவேலு அவர்களும், சொற்பொழிவாற்றியுள்ளார்.

     (அமெரிக்கா) திரு இராமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திரு வி.விசுவநாதன், 14.2.2015 அன்று மாலை, லிங்கத்தடிமேட்டில் உள்ள வள்ளலார் கல்வி நிலையத்தைப் பார்வையிட்டு, தவத்திரு முருகானந்த அடிகள் தவம் செய்த இடத்தையும் தரிசித்து வந்துள்ளார். ஒரு வகையில், அவரைப் பார்த்த தாக்கத்தின் காரணமாக, 2.3.2015 அன்று, திரு வி.விசுவநாதன் அவர்கள், வடலூருக்குச் சென்று, அங்கு ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தவத்திரு முருகானந்த அடிகளாரின் சமாதிக்குச் சென்று, பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.

    வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவ வேண்டும் என்ற நோக்கில், தமது காலத்தில் 108 சன்மார்க்க சங்கங்களை, தமிழ்நாடு முழுவதிலும் தவத்திரு முருகானந்த அடிகளார் அவர்கள் நிறுவி, சுத்த சன்மார்க்க வழியில் அனைவரும் தமது வாழ்க்கையினைத் தொடர சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார்.

     ஏனோ தெரியவில்லை, சன்மார்க்க நெறி பரவ அருந்தொண்டாற்றிய அவரது சமாதி வடலூரில் உள்ளது என்ற செய்தியே எந்த சன்மார்க்க அன்பருக்கும் தெரியவில்லை.

    இன்று அவரது நினைவு நாள். அவரை நினைவு கொண்டு, அவரது அருந்தொண்டினைப் பாராட்டுவோம்.

திரு விசுவநாதன், திண்டுக்கல் தொடர்பு எண். (91) 97906 62377.

திரு பெ.செளந்தரராஜன், தலைமை ஆசிரியர் தொடர்பு எண் (91) 97880 31691.
20150304_100653.jpg

20150304_100653.jpg

20150304_100628.jpg

20150304_100628.jpg

20150304_100702.jpg

20150304_100702.jpg

vlcsnap-2015-02-19-18h44m00s203.png

vlcsnap-2015-02-19-18h44m00s203.png

vlcsnap-2015-02-19-18h47m45s144.png

vlcsnap-2015-02-19-18h47m45s144.png

vlcsnap-2015-02-19-18h53m24s205.png

vlcsnap-2015-02-19-18h53m24s205.png