DAEIOU - தயவு
தைப்பூச விழா மூங்கில் ஊரணி சன்மார்க்க சங்கத்துக்கு அன்பர் திரு துரை அவர்களின் உதவி.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளில் மிகவும் ஈர்க்கப்பட்ட, திரு ஜெயராம் திருமதி வள்ளி தம்பதிகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், வள்ளலார் கோவிலைக் கட்டினர். பிரதி மாதந்தோறும், மாதப் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமையில், தாம் தங்கியுள்ள மானாமதுரையிலிருந்து, இந்த கிராமத்துக்கு, உணவு தயார் செய்து கொண்டு வந்து, ஏழை எளியோர் சுமார் 50 நபர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக, இந்த தம்பதிகள் வழங்கி ஜீவகாருண்ய ஒழுக்கம் பேணி வருகின்றனர்.

     அதே கிராமத்தில், திருமதி திருவம்மா என்ற அன்பர், இவர்களுக்குத் தம்மால் ஆன உதவியினைச் செய்து வந்தார். பின்னர், அவரும், மாதப் பூச நாளல்லாத ஒரு நாளில், அதே வள்ளலார் கோவிலில் அன்னதானப் பணியினை மேற்கொள்கின்றார். இந்த விதத்தில், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி, அந்த கிராமத்தில் விளங்குவதற்கு, இவர்கள் ஒரு காரண கர்த்தாவாக உள்ளனர்.

    இவர்களது பரோபகாரத்தைக் கேள்விப்பட்ட சுவிட்சர்லாந்தில் வசித்த அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்கள் நேரில், இங்கு வந்து அருட்பெருஞ்ஜோதி தரிசனம் செய்து சென்றார். அவர், இலங்கையில், வேம்பிராயில், சத்திய ஞான கோட்டம் கட்டி, அங்கு வள்ளலாரின் நெறி பரவுவதற்குக் காரணமாக இருந்து வந்தவர்.

    அதேபோல், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில், ஆசிரியப் பணி பார்த்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு துரைப் பாண்டியன் அவர்களும், இந்த மூங்கில் ஊரணி ஆலயத்துக்கு வந்து அருட்பெருஞ்ஜோதி தரிசனம் செய்து சென்றார். தீப வழிபாட்டுக்கு அவர் உதவியும் செய்து சென்றார்.

   இந்த 2015ஆம் ஆண்டு, தைப் பூச நாள் பெருவிழாவினைக் கொண்டாடும் பொருட்டு, அன்பர் திரு துரைப் பாண்டியன் அவர்கள், தம்மால் ஆன ஒரு தொகையினையும் கொடுத்து, அவ் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடும்படிச் சொல்லி உள்ளார். சன்மார்க்க அன்பர்கள், எங்கு வசித்தாலும், ஆன்மநேயப் பணிகளுக்கு உதவிகரமாக உள்ளனர் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.
vlcsnap-2014-03-30-22h10m55s231.png

vlcsnap-2014-03-30-22h10m55s231.png

vlcsnap-2014-03-30-22h13m18s119.png

vlcsnap-2014-03-30-22h13m18s119.png

vlcsnap-2014-03-30-22h13m58s11.png

vlcsnap-2014-03-30-22h13m58s11.png